• Jan 19 2025

ஆடுஜீவிதம்’ இயக்குனர் பிளஸ்சி, சசிகுமார் படத்தில் நடித்துள்ளாரா? அவரே அளித்த தகவல்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

இயக்குனர் பிளஸ்சி இயக்கத்தில் பிரித்விராஜ் சுகுமாரன், அமலாபால் நடிப்பில் ஏஆர் ரகுமான் இசையில் உருவான ஆடுஜீவிதம்’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியான நிலையில் இந்த படம் ஒரே நாளில் 15 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டும் இன்றி இன்று புனித வெள்ளி மற்றும் சனி, ஞாயிறு விடுமுறை என தொடர்ச்சியான விடுமுறை நாட்கள் இருப்பதால் இந்த படம் ஓப்பனிங் வசூல் அபாரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் கடந்த 2010ஆம் ஆண்டு தான் இயக்கிய ’ஈசன்’ என்ற திரைப்படத்தில் தன்னுடைய வேண்டுகோளுக்கு ஏற்ப ஒரு சின்ன கேரக்டரில் இயக்குநர் பிளஸ்சி நடித்திருந்தார் என்றும் அப்போதே அவர் ஆடுஜீவிதம்’ பற்றி தன்னிடம் கூறியிருந்ததாகவும் இயக்குனர் சசிகுமார் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:

பிளெஸ்சி சாரும் பின்னே நானும்

சுப்ரமணியபுரம் மலையாளத் திரைக்கதை வெளியீட்டு விழாவில் கிடைத்தது அவருடைய நட்பு. திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்று சொன்னவர் எனது ஈசன் திரைப்படத்தில் நட்புக்காக நடித்துக் கொடுத்தார். அப்பொழுதிருந்தே ஆடு ஜீவிதத்தின் கதையை மனதில் சுமந்து கொண்டிருந்தார். பெரும்பாரமென அக்கதை அவரது இதயத்தை அழுத்திக் கொண்டிருப்பதை அவர் பேச்சில் உணரமுடிந்தது. இத்தனை வருடம் கழித்து தனது பாரத்தை நமது இதயத்தில் ஏற்றி வைத்திருக்கிறார்.

திரைப்படத்தின் ஒற்றை வரியாக பிதாவே ஏன் என்னைக் கைவிட்டீர் என்ற குரல் எனக்குள் ஒலிப்பதைப் போல இருந்தது. பிருத்விராஜ் அக்குரலைப் பின் தொடர்ந்து சென்றிருக்கிறார். மனதையும் உடலையும் ஒப்புக் கொடுத்திருக்கிறார். பின்னணியில் முன்னணியாக ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்த்தியிருப்பது மாபெரும் பேரிசை. எவரும் மறக்க முடியாத மறுக்க முடியாத பெருவெள்ளம்.

பிளெஸ்சி சாருக்கு எனது அன்பும் வாழ்த்துக்களும். 

Advertisement

Advertisement