• Jan 19 2025

இயக்குநர் அமீர் கைது.. ’மக்கள் போராளி’ பட்டம் கொடுத்தது யார்? வைரல் வீடியோ..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் அமீர் கைது செய்யப்பட்டது மற்றும் அவருக்கு மக்கள் போராளி என்ற பட்டம் கொடுக்கப்பட்ட காட்சிகள் அவர் நடித்த படத்தின் டீசரில் உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான அமீர் கடந்த சில ஆண்டுகளாக சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் ஒரு சில திரைப்படங்களில் முக்கிய வேடத்திலும் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்தது. 

அந்த வகையில் அமீர் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று ’உயிர் தமிழுக்கு’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் சற்று முன் இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. 

அதில் அரசியல்வாதியாக நடித்திருக்கும் அமீர் ஒரு கொலை வழக்கில் சிக்கிக் கொள்ள அவரை கைது செய்ய காவல்துறையினர் வருகின்றனர். அப்போது ’பதவி பணம் புகழ் எல்லாவற்றையும் பார்த்தாகிவிட்டது, அடுத்ததாக ஜெயிலையும் பார்த்து விட வேண்டியது தான் என்று அவர் கைதாகி செல்கிறார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் பேட்டி எடுக்கும் போது ’தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும்’ என்று கூறிவிட்டு சிரித்துக் கொண்டே செல்லும் காட்சிகளுடன் இந்த டீசர் முடிவுக்கு வருகிறது.

ஆதம்பாவா இயக்கத்தில் வித்யாசாகர் இசையில் உருவாகிய இந்த படத்தில் அமீர், சாந்தினி, ஆனந்தராஜ், இமான் அண்ணாச்சி, மகாநதி சங்கர், சுப்பிரமணியம் சிவா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 




Advertisement

Advertisement