• Jan 18 2025

கமல் மகளுடன் சுற்றிய லோகி.. கடுப்பில் ரஜினிகாந்த் செய்த தரமான சம்பவம்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ரஜினி இடம் ’தலைவர் 171’ படத்தின் திரைக்கதைக்கு தான் மூன்று மாதங்கள் மட்டும் அவகாசம் எடுத்துக் கொள்வதாகவும் அதற்கு மேல் எடுத்துக் கொள்ள மாட்டேன் என்றும் கூறியிருந்தார். ஆனால் இடையில் திடீரென கமல் மகளுடன் ’இனிமேல்’ என்ற ஆல்பத்தில் நடிக்க சென்றதால் நம்முடைய படத்தின் வேலைகளை விட்டுவிட்டு இவர் வேறு எதையோ பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று கடுப்பான ரஜினிகாந்த் உடனே லோகேஷ் கனகராஜை அழைத்து திரைக்கதை எந்த அளவுக்கு உள்ளது என்று கேட்டாராம்.

அதற்கு பாதிக்கு மேல் முடிந்து விட்டதாக லோகேஷ் கூற இன்னும் கடுப்பான ரஜினிகாந்த் இந்த படத்தின் வேலைகளை முழுமையாக சீக்கிரம் முடியுங்கள் என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் பேசிய ரஜினிகாந்த் உடனடியாக ஒரு அறிவிப்பை வெளியிடுங்கள் என்று கூற அதன் பின்னர் தான் அவசர அவசரமாக பர்ஸ்ட் லுக் போஸ்டர் தயார் செய்யப்பட்டதாகவும் இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தயாரானது லோகேஷ் கனகராஜூக்கு தெரியாது என்று கூறப்படுகிறது.

இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்ட்டர் ரிலீஸ் ஆவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் தான் லோகேஷ் கனகராஜூக்கு தகவல் கொடுக்கப்பட்டதாகவும் இதன் மூலம் சீக்கிரம் இந்த படத்தின் பணிகளை தொடங்க வேண்டும் என்று மறைமுகமாக அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

எனவே இனிமேல் ’இனிமேல்’ உள்பட எந்த பக்கமும் திரும்பாமல் கவனத்தை சிதற அடிக்காமல் முழுமையாக ’தலைவர் 171’ படத்தில் லோகேஷ் கனகராஜ் மூழ்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement