• Aug 25 2026

பாக்கியத்தின் வார்த்தையால் சரவணன் எடுத்த அதிரடியான முடிவு.! கோபத்தில் மயில்..

shali / 2 months ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, சரவணன் பாக்கியம் வீட்ட போய் அஞ்சலி வீட்ட எதுக்காக போனீங்க என்று சொல்லிப் பேசுறார். மேலும், அவளைப் பற்றி தப்பா பேசுறதுக்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கு என்று கேட்கிறார் சரவணன். அதைக் கேட்ட மயிலோட அப்பா அந்தப் பொண்ணுக்காகத் தானே மயிலை வேணாம் என்று சொன்னீங்க அதுதான் அங்க போய் பேசினோம் என்கிறார். 

பின் மயில் பண்ண தப்புக்காகத் தான் வேணாம் என்று சொன்னேன் என்கிறார் சரவணன். அந்த நேரம் பார்த்து மயில் அங்க வந்து நடந்ததெல்லாத்தையும் கேட்டிட்டு பாக்கியத்தைப் பேசிக் கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து பாக்கியம் சரவணனைப் பார்த்து எவளோ ஒருத்திக்காக நீ கோபப்படும் போது பெத்த பொண்ணுக்காக நான் கோபப்படக் கூடாதா என்று கேட்கிறார்.


மறுபக்கம் பாண்டியன் கதிருக்கு போன் எடுத்து நடந்ததெல்லாத்தையும் சொல்லுறார். மேலும், அந்த விசயத்துக்கு பிறகு சரவணன் கோபமா அங்கிருந்து கிளம்பி போய்ட்டான் எங்க போனான் என்று தெரியல பார்க்கச் சொல்லுறார் பாண்டியன். அதைக் கேட்ட கதிர் தான் போய் பார்க்கிறேன் என்கிறார். 

அதைத் தொடர்ந்து சரவணன் மயில் குடும்பத்தைப் பார்த்து இதுக்கு மேல என்னோட விஷயத்தில தலையிட வேண்டாம் என்று கோபமாகச் சொல்லுறார். பின் கதிர் சரவணனை அங்கிருந்து கூட்டிக் கொண்டு போறார். அதனை அடுத்து மயில் பாக்கியத்தைப் பார்த்து விவாகரத்து வேணும் என்று அவர் கேட்டாரு நானும் கொடுத்திட்டன் இனி அவரைப் பற்றி கதைக்க வேணாம் என்று சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement