• Jul 29 2026

சினிமாவில் நுழையும் யூடியூபர்கள்... லோகேஷின் முடிவு 'மிஸ்டர் பாரத்' படத்தை பாதிக்குமா?

shali / 1 month ago

Advertisement

Listen News!

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படமான 'மிஸ்டர் பாரத்' படத்தின் முக்கிய பணிகளில் ஒன்றான டப்பிங் பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தை நிரஞ்சன் இயக்கியுள்ள நிலையில், பிரபல யூடியூபர் பாரத் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக 'கட்சி சேர' படத்தின் மூலம் கவனம் பெற்ற சம்யுக்தா விஸ்வநாதன் நடித்துள்ளார். மேலும் பால சரவணன், நிதி பிரதீப், லிங்கா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


சமீபத்தில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த ஜனவரி மாதமே நிறைவடைந்தன. அப்போது படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.

தற்போது டப்பிங் பணிகளும் வெற்றிகரமாக முடிந்துள்ளதை படக்குழு வீடியோ ஒன்றின் மூலம் பகிர்ந்துள்ளது. இதனால் படத்தின் பின்னணி வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. விரைவில் டிரெய்லர், பாடல்கள் மற்றும் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகும் இந்த புதிய படம் ரசிகர்களிடையே ஏற்கனவே நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள நிலையில், அடுத்தடுத்த அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Advertisement

Advertisement