• Jan 19 2025

சுயநலம் இல்லாத மனுஷன்... ரொம்ப வருத்தமா இருக்கு... கண்கலங்கி கூறிய சரத்குமார்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

கேப்டன் விஜயகாந்த்  காலமாகி பல லட்ச மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி தலைவரின் அடக்கம் நல்ல முறையில் நடைபெற்றது . பல பிரபலங்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். சிலர் தவிர்க்கமுடியாத  காரணத்தினால் வராமல் இணையத்தளங்களில் மன இரங்கல் தெரிவித்துள்ளனர் . 


இந்த நேரத்தில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கேப்டன் விஜகாந்தின் நினைவிடத்திற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார . அந்த வேளையில் செய்தியாளர்களோடு உரையாடும் போது அவர் கூறியதாவது.


விஜயகாந்த் மறைந்த செய்தி அறிந்தநேரம் நான் வெளிநாட்டில் இருந்ததால் உடனடியாக வர முடியவில்லை. என்று மனவருத்தத்துடன் தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக 5 படங்கள் அவரின் தயாரிப்பில் என்னை வைத்து எடுத்தார். தன்னை விட போட்டியாக வந்திடுவார் என்ற நினைப்பு வேற யாருக்கும் வரும் ஆனால் இவருக்கு வராது அப்பிடி ஒரு நல்ல உள்ளம் படைத்த மனுஷன் , சுயநலம் இல்லாத மனுஷன் இப்பிடி சொல்ல போனால் நிறையவே சொல்லிட்டு போகலாம் .


பார்த்த பல மனிதர்களில் விஜயகாந்த் ஒரு சிறந்த மனிதர், அவர் மீண்டும் உடல் நலம் சரி வந்து மறுபடியும் வலம் வருவார் என்று நினைத்தோம். அது நினைவாகவே போய் விட்டது . மிகவும் மன வருத்தமாக உள்ளது . என்று கண் கலங்கிய சரத்குமார் . 


அவருடைய குணங்கள் , அவருடைய பண்புகள் அதை நாம் பின்பற்ற வேண்டும் . என்றும் எல்லோருடைய மனதிலும் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார். வராத நடிகர்களை பற்றி கதைக்க இந்த நேரத்தில் கதைக்க விரும்பவில்லை. ஒரு நல்ல மனுஷன் இறந்து வரவில்லை என்றால் அவருடைய ஆசி அவர்களுக்கு இருக்கட்டும் என்று கூறியுள்ளார். 

Advertisement

Advertisement