தமிழ் சினிமாவில் நன்கு அறியப்பட்ட இசை அமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் காணப்படுகின்றார். இவருக்கென மிகப் பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. தற்போது சல்மான் கான் நடிக்கும் சிக்கந்தர் படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாக உள்ளார்.
அட்டக்கத்தி, கபாலி, வட சென்னை, ஜிகர்தண்டா உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். குறிப்பாக கபாலி படத்தில் இவருடைய பின்னணி இசை பெரிதும் பேசப்பட்டது.
இதைத்தொடர்ந்து சமீபத்தில் தெலுங்கில் வெளியான கல்கி 28 92 ஏடி படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவிலும் அறிமுகமானார். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ரசிகர்களை கவறாவிட்டாலும் பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக காணப்பட்டது.
இவ்வாறான நிலையில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் சிக்கந்தர் படத்தில் மூலம் இந்தி சினிமாவிலும் அறிமுகமாக உள்ளார் சந்தோஷ் நாராயணன். தற்போது இந்த தகவல்கள் வெளியாகி வைரலாகியுள்ளன. மேலும் சல்மான்கானின் பிறந்த நாளை முன்னிட்டு சிக்கந்தர் படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாக உள்ளது.
இதேவேளை, கடந்த ஆண்டு ஜவான் திரைப்படத்தின் மூலம் அனிருத் இந்தியில் சினிமாவில் அறிமுகமானதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!