சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 73வது பிறந்த நாளை முன்னிட்டு, ரசிகர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதனை முன்னிட்டு, நடிகர் சந்தீப் கிஷன், ரஜினிகாந்தின் அடுத்த படமான "கூலி" திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த ஒரு பிரத்யேக புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
புகைப்படத்தில் ரஜினி அவர்கள் தனது இயல்பான உடையில் மிகவும் கம்பீரமாக இருப்பது ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளதுடன் சந்தீப் கிஷன் தனது பதிவில், "ரஜினி சார் எனக்கு மிகப்பெரிய முன்னுதாரணம்! அவருடன் ஒரு படத்தில் பணியாற்றுவது கனவுக்குப் போன்றது. அவருக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்!" என குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவுக்கு ரசிகர்கள் நீங்களும் அங்கேயே இருக்கின்றிர்கள்,உங்களது இந்த கூட்டணிக்கு வாழ்த்துக்கள் போன்ற கமெண்ட்களை பதிவிட்டுள்ளனர்.இதன் மூலம் கூலி திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பும் பலமடங்கு அதிகரித்துள்ளது.
Listen News!