• May 28 2025

Sam நீங்க வேறலெவல்.. கிளாமரா என்றி கொடுத்த சமந்தா! அதிர்ச்சியில் திக்குமுக்காடிய ரசிகர்கள்

subiththira / 15 hours ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய அடையாளத்தைக் கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. இவர் தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகையாக பல வருடங்களாக நடித்து வருகின்றார். இதன்மூலம் பல ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்திருந்தார்.


அத்தகைய நடிகை சமீபகாலமாக சினிமாவில் இருந்து ஓரளவு ஓய்வெடுத்து, அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்துவிட்டு, மீண்டும் தன்னம்பிக்கையுடன் திரும்பியுள்ளார். தற்போது சமூக வலைத்தளங்களில் புதிய பயணத்தை தொடங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன்படி, சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் சமந்தா ரீ-என்ட்ரி என்ற அளவிற்கு வைரலாகி வருகின்றது.


அந்தப் புகைப்படங்களில், அவர் கருப்பு நிற மாடர்ன் உடையில், மிகவும் ஸ்டைலிஷாகவும், அழகாகவும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். சரளமாகச் சிரிக்கும் அவரது முகம், அழகிய கூந்தல், மெருகூட்டப்பட்ட தோல்  இவை அனைத்தும் ரசிகர்களிடம் புது கிளுகிளுப்பை உருவாக்கியிருக்கின்றன.


இந்தப் புகைப்படங்களைப்  பார்த்த பலரும் "சமந்தா, நீங்க மீண்டும் கியூட்டா வந்திட்டீங்க..!" என்று லட்சக்கணக்கான லைக்குகள் மற்றும் கமெண்ட்ஸினைப் பகிர்ந்து வருகின்றனர். அத்துடன் இந்தப் போட்டோவிற்கு இன்ஸ்டாவில் சில மணிநேரத்தில் 10 லட்சத்திற்கும் மேல் லைக்குகள் வந்துள்ளன. 


தற்போது இவர் ஹிந்தியில் ஒரு web series மற்றும் தெலுங்கில் ஒரு பெரிய female-led project ஆகியவற்றில் பிஸியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனாலேயே அவர் மீண்டும் தனது இன்ஸ்டாப் பக்கத்தை glamorous லுக்கினால் நிரப்ப ஆரம்பித்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement