பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, செழியனை வெளியில கொண்டுவருவதற்காக பாக்கியா அமைச்சரிட்ட உதவிக்கு வந்துநிக்கிறார். அப்ப ஒருவர் வந்து இண்டைக்கு அமைச்சரின்ர பிறந்தநாள் கொஞ்ச நேரம் பொறுத்து அவரை meet பண்ணலாம் என்கிறார். அதைக் கேட்ட செல்வி இவர் உண்மையிலேயே அமைச்சரைப் பார்க்க ஏற்பாடு பண்ணுவாரா என்று கேக்கிறார்.
அந்த பிறந்தநாளுக்கு சமைச்ச சாப்பாடு ஒன்றுமே சரியில்லாமல் இருக்கிறதைப் பாத்து ஓனர் பேசிக்கொண்டிருக்கிறார். அதைப் பார்த்த பாக்கியா நாங்க சமைச்சு தாறோம் நீங்க வேற ஆட்களை எல்லாம் தேடாதீங்க என்று சொல்லுறார். பின் ஓனர் நீங்க சின்ன ஹோட்டல் வச்சிருக்கீங்க உங்கள நம்பி எப்புடி இத்தனை பேருக்கு சமைக்கவிடுறது என்கிறார்.
இதனை அடுத்து பாக்கியா ஏற்கனவே நான் ரெண்டு பெரிய ரெஸ்டாரெண்டை நடத்தின அனுபவம் இருக்கு என்று ஓனருக்குச் சொல்லுறார். அதைக் கேட்ட ஓனர் ஒரு பிரச்சனையும் இல்ல நீங்க சமையலை மட்டும் ஒழுங்கா செய்து கொடுத்தால் அமைச்சரே உங்களைக் கூப்பிட்டுப் பாராட்டுவார் என்கிறார்.
அதைத் தொடர்ந்து பாக்கியா செல்வியைப் பாத்து பிரியாணி பண்ணிடலாம் என்று சொல்லுறார். மேலும் நாங்க அவங்களுக்கு இந்த சமையல் விஷயத்தில உதவி பண்ணினாத் தான் அவங்களும் எங்களுக்கு உதவி செய்வாங்க என்கிறார். பின் பாக்கியா சமையல் வேலை எல்லாத்தையும் செய்யத் தொடங்குகின்றார்.
இதனை அடுத்து பாக்கியா சமைக்கிறதைப் பாத்த கவுன்சிலர் உங்கள யாரு இங்க சமைக்கவிட்டது என்று கேக்கிறார். மேலும் நீங்க எல்லாம் சமைக்க கூடாது இங்க இருந்து கிளம்புங்க என்கிறார். பின் பாக்கியா இண்டைக்கு எப்புடியாவது அமைச்சரைப் பாத்தே ஆகணும் என்று சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!