• Mar 31 2025

சமந்தாவின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்.. ஹாலிவுட் நாயகிக்கு இணையான ஆக்சன் - கிளாமர்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை சமந்தா நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் போஸ்டர் வெளியாகி உள்ளதை அடுத்து இந்த போஸ்டரில் சமந்தாவை பார்க்கும்போது ஹாலிவுட் பட நடிகை போல் கிளாமராகவும் ஆக்சன் நாயகியாகவும் இருக்கிறார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகை சமந்தா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மயோசிட்டி என்ற நோய் காரணமாக முழு ஓய்வு எடுத்து சிகிச்சை பெற்று வந்தார் என்பதும் தற்போது அவர் முழுமையாக குணமாகிவிட்டதை அடுத்து மீண்டும் படப்பிடிப்பில் கலந்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.

இந்நிலையில் சமந்தாசிட்டாடல்என்ற வெப் தொடரில் நடித்து வந்தார் என்பதும்தி ஃபேமிலி மேன் 2’ என்ற வெப் தொடரை இயக்கிய ராஜ்&டிகே  தான் இந்த வெப் தொடரையும் இயக்கி வருகின்றனர் என்பதை பார்த்தோம். மேலும் ஹாலிவுட்டில்சிட்டாடல்என்ற பெயரில் பிரியங்கா சோப்ரா நடித்த தொடர் தான் தமிழ் உள்பட இந்திய மொழிகளில் இந்த தொடர் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெப் தொடரின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் தற்போது இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளதை அடுத்து இந்த போஸ்டரில் சமந்தாவின் அட்டகாசமான போஸ் பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். அச்சு அசலாக ஹாலிவுட் நடிகை போலவே சமந்தாவின் போஸ் இருப்பதாகவும் நிச்சயம் இந்த வெப் தொடர் சமந்தாவுக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று கொடுக்கும் என்றும் கூறி வருகின்றனர். இந்த வெப் தொடர் அமேசான் பிரைம் ஓடிடியில் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement