மும்பையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு பிரம்மாண்டமான பேஷன் ஷோ நிகழ்ச்சி, ரசிகர்களை மட்டுமல்ல, பேஷன் உலகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

இந்த நிகழ்ச்சி, பிரபல பேஷன் டிசைனர் விக்ரம் பட்னியின் 35 ஆண்டுகால சாதனையை கொண்டாடும் வகையில் "Vintage India" என்ற கருப்பொருளில் அரங்கேறியது. இந்த ஷோவின் மிகப்பெரிய ஹைலைட்டாக, நடிகர் சல்மான் கான், தனது வசீகர தோற்றத்துடன் ராம்வாக் செய்த தருணம் இடம்பிடித்துள்ளது.
விக்ரம் பட்னி இந்தியா முழுவதும் குறிப்பிடத்தக்க அளவில் பெயர் பெற்ற பேஷன் டிசைனர். இவர் கடந்த 35 ஆண்டுகளாக இந்திய பாரம்பரிய ஆடைகள் மற்றும் நவீன ஃபேஷனுக்கிடையிலான பாலமாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் அத்தகைய கலைஞரை பாராட்டும் விதமாக நிகழ்ந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சல்மான் கானின் கம்பீரமான நடை, தன்னம்பிக்கை நிறைந்த முகபாவனை என்பவற்றை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
Listen News!