தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வந்த ரவிமோகன் தற்போது தயாரிப்பாளராகவும் பாடல் ஆசிரியராகவும் அவதாரம் எடுத்துள்ளார். சமீபத்தில் ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை பிரம்மாண்டமாக ஆரம்பித்தார்.
அதில் ரவி மோகனின் குடும்பத்தினர் கலந்து கொண்டதோடு பல பிரபலங்களும் கலந்து கொண்டனர். மேலும் ரவி மோகனின் நெருங்கிய தோழியான கெனிஷாவும் குறித்த விழாவில் உருக்கமாக பேசியிருந்தார்.
இதை தொடர்ந்து ரவி மோகன் தயாரிப்பிலும் நடிப்பிலும் வெளியாகி உள்ள திரைப்படங்கள் தொடர்பில் வீடியோ கிளிப்ஸ்கள் வெளியாகின. அதில் ப்ரோ கோட் என்ற வீடியோ, மனைவியால் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் கணவர்களுக்கு சமர்ப்பணம் என்பது போலவே காணப்பட்டது.

அதற்கு பின்பு ஜோகி பாபு நடிக்கும் படத்தின் போஸ்டரும் வீடியோவும் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்தது. ரவி மோகனின் தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சனைகள் இருந்தாலும் தற்போது அவர் சினிமா துறையில் முன்னேறுவது பாராட்டை பெற்றுள்ளது.
இந்த நிலையில், ரவி மோகன் தனது அம்மாவை பற்றி எழுதிய பாடலை கெனிஷா பாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
ஏற்கனவே அவருடைய அம்மாவுக்காக ஒரு பாடலை எழுதும் படி கெனிஷா கூறியுள்ளார். இதனால் நான் என்னுடைய அம்மாவை நினைத்து இந்த பாடலை எழுதினேன் என ரவி கூறி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Listen News!