விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் ஆண்டுதோறும் ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் பிக் பாஸ் – 9வது சீசன் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
இந்த சீசன் ஆரம்பத்தில் பல்வேறு விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் சந்தித்த போதிலும், இறுதிக்கட்டத்தில் எதிர்பாராத திருப்பங்களுடன் பரபரப்பான சூழலை ஏற்படுத்தியது.
டைட்டில் வின்னராக பார்வதி தேர்வாகுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கார் டாஸ்க் போது சாண்ட்ராவை தாக்கியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், பார்வதிக்கு ரெட் கார்ட் வழங்கப்பட்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவருடன் கமருதீனும் ரெட் கார்ட் பெற்று வெளியேற்றப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, திவ்யா கணேஷ் இந்த சீசனின் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். இருப்பினும், “உண்மையான டைட்டில் வின்னர் பார்வதிதான்” என பல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில், பார்வதி மற்றும் கமருதீன் ஆகியோர் கலந்து கொண்ட ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. காரில் வந்த பார்வதிக்கு ரசிகர்கள் மேளதாளங்கள் முழங்க அமோக வரவேற்பு அளித்தனர். பார்வதியும் காருக்குள் இருந்தபடியே ரசிகர்களுடன் ஆடி மகிழ்ந்தார். இந்த நிகழ்ச்சியில் பார்வதிக்கு ரசிகர்களால் ‘மக்கள் செல்வி’ என்ற பட்டமும் வழங்கப்பட்டது.
அந்த சந்திப்பின்போது, கமருதீனிடம் “உங்கள் மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டீர்கள்?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நான் ஜாலியானவன். எப்போதும் அன்பாகப் பேசும், ‘என்னங்க.. மாமா..’ என்று அழைக்கும் அமைதியான மனைவி வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் இப்போது தைரியமான சிங்கப் பெண்ணே என் வாழ்க்கை துணையாக கிடைக்க உள்ளார்” என்று கூறி ரசிகர்களை கவர்ந்தார்.
தற்போது, இந்த ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சியைச் சேர்ந்த புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
Listen News!