தென்னிந்திய திரையுலகில் நடிப்பிலும், கவர்ச்சியிலும் தனித்துவமான இடத்தை பெற்ற நடிகை சாக்ஷி அகர்வால் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட போட்டோக்கள் காரணமாக மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இவர், தன் கேரியர் தொடக்க காலத்திலிருந்து சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஆன்லைன் ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறார்.
சாக்ஷி அகர்வால் திரையுலகில் பாதை அமைக்க தொடங்கிய வரலாறு மிகவும் சுவாரஸ்யமாகும். அவர் தனது கேரியரை தொலைக்காட்சி விளம்பரங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடிப்பதற்காக தொடங்கினார். அப்போது சினிமா வாய்ப்புகளை தேடி அலைந்து திரிந்தார். அதற்கிடையில், அட்லீ இயக்கத்தில் வெளியான “ராஜா ராணி” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அந்த வாய்ப்பு அவரது கேரியரில் ஒரு முக்கிய பலமாக இருந்தது. அந்த சிறிய கதாபாத்திரம் மூலம் சாக்ஷி தனது திறமைகளை வெளிப்படுத்தி, இயக்குநர்களின் கவனத்தை ஈர்த்தார். அதன் பின்னர் சில திரைப்படங்களில் தொடர்ந்தும் நடித்தார்.

இதற்கிடையில், சாக்ஷி பிக்பாஸ் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சி அவருக்கு பிரபலத்தையும், சமூக வலைத்தளங்களில் பெரும் ஆதரவையும் கொடுத்திருந்தது.
இந்நிலையில், சாக்ஷி அகர்வால் தற்பொழுது வெளியிட்ட புகைப்படங்கள் மீண்டும் ரசிகர்களை மிரட்டியுள்ளது. அந்தப் புகைப்படங்களில் அவர் காட்டிய கவர்ச்சி இளசுகளைக் கவர்ந்துள்ளது.
Listen News!