தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் அஜித் தற்போது சினிமாவைவிட அதிக கவனத்தை கார் ரேஸிங் போட்டிகளில் செலுத்தி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக, திரையுலகில் தனக்கான ரசிகர் ஆதரவினை உறுதிப்படுத்திய அஜித், தற்போது தனது ரேஸிங் திறமையை வெளிப்படுத்தும் வகையில் போட்டிகளில் பங்கேற்கிறார்.

சமீபத்தில், அஜித் துபாயில் நடைபெற்ற கார் ரேஸிங் போட்டியில் கலந்து கொண்டார். இந்த போட்டியின் போது அவரை பல பிரபலங்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.
இந்நிலையில், ரேஸிங் போட்டியின் போது அஜித் அணியின் கார் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. இந்த தருணம் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது. அதே நேரத்தில், காரை ஓட்டிய வீரர் அயர்டன் ரெடான்ட் உடனடியாக காரை நிறுத்திவிட்டு வெளியே ஓடினார்.
இதற்கு முன்பும், அஜித் அணியின் கார்கள் பல சம்பவங்களில் சிக்கி, சில நேரங்களில் சிறிய விபத்துகளும் நிகழ்ந்துள்ளது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் இருந்தாலும், கார் பாதுகாப்பு பிரிவினர் சிறப்பாக செயல்பட்டதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்து நிகழ்ந்த உடனே, அஜித் தனது ரசிகர்களுக்கு உரையாற்றி உற்சாகமான வாக்குறுதி அளித்துள்ளார். அவர் அதன்போது, “எனக்கு ஆதரவு கொடுக்க திரண்டு வந்த ரசிகர்கள், நான் ரேஸ் ஓட்டுவதை, எங்கள் அணி பரிசு வெல்வதை பார்க்க முடியாதது வருத்தமாக இருக்கிறது. என் ரசிகர்களுக்கு சத்தியம் செய்கிறேன். நல்ல காலம் காத்திருக்கிறது. எங்கள் அணி ஒருநாள் நிச்சயம் அவர்களை பெருமைப்படுத்தும்.” என்று கூறியுள்ளார்.
Listen News!