• Feb 12 2026

பிக் பாஸ் 9 கிராண்ட் ஃபினாலேவில் தெறிக்கவிட்ட பார்வதி.! சிறப்பாக நடந்த சம்பவம் இதுதான்

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி நேற்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது.  இதன்போது விஜே பார்வதி, கமருதீன் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உருக்கமாக பேசி இருந்தனர். 

இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் கமருதீனை வரவேற்ற விஜய் சேதுபதி, ஆரம்பத்தில் இருந்து சிறப்பாக விளையாடினார்கள். உங்களுக்கு ரெட் கார்ட் கொடுத்ததில் எனக்கு வருத்தம் என தெரிவித்தார். மேலும் பார்வதிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் அவரால் வர முடியவில்லை எனவும் கூறினார். 

ஆனால் நிகழ்ச்சி முடிவடையும் தருவாயில் பார்வதி பிரம்மாண்டமாக என்ட்ரி கொடுத்தார். அவரை அரங்கில் இருந்தவர்கள் அமோ கரகோஷத்துடன் வரவேற்றனர்.  

இதன்போது நெகிழ்ந்த பார்வதி, முதலில் சாண்ட்ராவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் வீட்டை விட்டு வெளியேறிய வேளையில் மற்றவர்களை பற்றி நினைக்க முடியவில்லை. இந்த வீடு எனக்கு கண்ணீர், காதல், மகிழ்ச்சி என அனைத்தையும் கொடுத்தது. இத்தனை நாட்களாக மக்கள் எனக்கு அளித்த ஆதரவுக்கு நன்றி என உருக்கமாக பேசினார். 


அதன்பின்பு மேடைக்கு வந்த சாண்ட்ராவும் பார்வதியை கட்டி அணைத்து தனது ஆதரவை வெளிப்படுத்தினார். இந்த தருணத்தை விஜய் சேதுபதி பாராட்டினார். 

இந்த நிலையில்,  கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்றைய தினம் வெளியான கோஸ்ட் ப்ரோமோ 2.6 மில்லியன் வியூக்களை பெற்றதாகவும், பைனல் லிஸ்ட் 2.3 பெற்றதாகவும், ஆனால் பார்வதி கமருதீன் என்ட்ரி கொடுத்த ப்ரோமோ மட்டும் 6.6 மில்லியன் வியூசுக்களை ஒரு மணித்தியாளத்துக்குள் பெற்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது .

ஏற்கனவே பார்வதி தான் இந்த சீசனின் உண்மையான டைட்டில் வின்னர் என பலரும் எதிர்பார்த்த நிலையில்,  அவர் ரெட் கார்ட் பெற்று வெளியேறி சென்றார். ஆனாலும் பார்வதி தான் இதன் உண்மையான வின்னர் என ட்விட்டர் பக்கத்திலும் ஹாஸ்டாக்குகள் வைரலாகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


 

Advertisement

Advertisement