பிரபல நடிகராக காணப்படும் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியையும் ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் விஜய் நடத்திய மாநாடு பல அரசியல் தலைமைகளுக்கும் பேரிடியாக காணப்பட்டது.
இந்த ஆண்டு ஆரம்பத்தில் தனது கட்சியை அதிகாரப்பூர்வமாகவே நிலைநாட்டி இருந்தார் விஜய். இதை தொடர்ந்து கட்சி தொடர்பான அறிக்கை, கொடி, பாடல் என அடுத்தடுத்து ஒவ்வொன்றையும் அறிமுகப்படுத்தி வைத்திருந்தார்.
நடிகர் விஜய் தற்போது தனது 69 ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே அவருக்கு ஜோடியாக நடித்துள்ளதோடு மலையாள நடிகையான மமீதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பதற்கு கமிட் ஆகி உள்ளார்கள்.
இந்த படத்துடன் விஜய் சினிமா துறையில் இருந்து விலகி முழு நேரமாகவே அரசியலில் பயணிக்க உள்ளதாக தெரிவித்திருந்தார். இது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பல பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
இந்த நிலையில், விஜய் அரசியலுக்கு வந்துவிட்டார்... பொதுக்கூட்டம் போட்டு விட்டார்.. அவர் நடித்துக் கொண்டே அரசியல் செய்யலாம்.. படங்களில் நடிப்பதை நிறுத்தியது எங்களைப் போன்றவர்களுக்கு எல்லாம் மன வருத்தம் என நடிகர் நடராஜ் தெரிவித்துள்ளார். தற்போது இவர் தெரிவித்த கருத்து வைரலாகி வருகின்றது.
Listen News!