• Jan 18 2025

சூர்யா மீது ரொமான்ஸ் வழிந்தது.. அவரை புருஷனாக்க நினைத்தேன்! சுசித்ரா பரபரப்பு பேட்டி

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பின்னணிப் பாடகி, பத்திரிகையாளர், நடிகை, ஆர் ஜே என்று பன்முகங்களை கொண்டவர் தான் சுசித்ரா. இவர் பிரபல யூட்யூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றார்.

சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் குமார் சுசித்ரா மீது வழக்கு  தொடர்ந்துள்ளார். அதேபோல நடிகை ரீமா கல்லிங்கும் போலீஸ் புகார் கொடுத்துள்ளார். ஆனாலும் சுசித்ரா அதை எதையும் கண்டு கொள்ளாது தொடர்ந்தும் பேசி வருகின்றார்.

இந்த நிலையில், நடிகர் சூர்யா பற்றி சுசித்ரா பேசியுள்ள விஷயங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் ட்ரெண்ட் ஆகி உள்ளது.

அதன்படி அவர் கூறுகையில், எனக்கு அடுத்த ஜென்மத்தில் ஆவது சூர்யா புருஷனாக வரவேண்டும் என்று நினைத்தேன். நானும் அவரும் ஆயுத எழுத்து படத்தில் நடித்தோம். அந்த சமயத்தில் நான் சூர்யாவை ரசித்துக் கொண்டே இருப்பேன். அதனை மணிரத்தினம் பார்த்து திட்டிக்கொண்டே இருப்பார். ஒரு சீனில் சூர்யா ஒரு டயலாக்கை அவ்வளவு போர்ஸ் ஆக பேசிக்கொண்டு இருப்பார். அவருக்கு பின்னால் இருக்கும் நாங்கள் அழுத்தத்தில் இருப்பது போல ரியாக்ஷன் கொடுக்க வேண்டும். 


ஆனால் சூர்யாவை முன்வைத்து கொண்டு என்னால் அப்படி இருக்க முடியவில்லை. எனது கண்கள் அவரை ரசித்துக் கொண்டே இருந்தன. ரொமான்ஸ் வடிந்தது. மணிரத்தினம் அதை கண்டுபிடித்தாலும் சூர்யாவை என்னால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை. எனக்கு அவரது கண்கள் ரொம்ப பிடிக்கும். அவ்வளவு அழகு அவருடைய கண்கள். என்னால் கண்ட்ரோல் பண்ணவே முடியவில்லை. அந்த சீன் எடுக்கும் போது பல டேக்குகள் சென்றன. ஒரு கட்டத்தில் மணிரத்தினம் நீ குனிந்து கொள் நான் உன்னுடைய தலையை வைத்து எடுத்துக் கொள்கின்றேன் டப்பிங்கில் பார்த்துக் கொள்ளலாம் என்றார்.

ஒரு கட்டத்தில் சூர்யா வீட்டுக்கு சென்று மாப்பிள்ளை கேட்கலாமா என்று யோசித்தேன். அவர்களுடைய குடும்பம் பெரிது. ஆனால் நான் சென்று இருந்தால் என்னை சிவக்குமார் கேவலமாக திட்டி என்னை வெளியே அனுப்பி இருப்பார். அதனால் அன்றைய இரவில் அந்த காதலை குழி தோண்டி புதைத்து சமாதி கட்டி விட்டேன் என்று கூறியுள்ளார்.


Advertisement

Advertisement