• Mar 26 2025

"மலேசியா மாமா அல்ல..அது கறிக் கடை மாமா...!" – மனோஜ் கிட்ட மன்னிப்புக் கேட்கும் ரோகிணி..!

subiththira / 20 hours ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, மீனா ஒரு நாள் சிக்கன் வாங்கிக் கொண்டு வந்து சமைச்சேன் எல்லோ அது இவரோட கடைல இருந்து தான் வாங்கினேன் என்று ரோகிணிட அங்கிளப் பார்த்துக் கூறினார். அதைக் கேட்டு மனோஜ் என்ன ரெண்டு பேரும் அலட்டுறீங்க என்று கேக்கிறார். அதுக்கு முத்து நாங்க ஒன்னும் அலட்டேல இவளா நாளா இந்த பார்லர் அம்மா தான் உங்கள எல்லாம் ஏமாத்திட்டு இருந்தாங்க என்று சொல்லுறார்.

அதுக்கு ரோகிணி போதும் முத்து ரொம்ப ஓவராப் போயிட்டிருக்க என்று சொல்லுறார். மேலும் இவர் வேணும் என்றே என்ர அங்கிள கூட்டிக் கொண்டு வந்து தேவையில்லாத பிரச்சனை பண்ணிக் கொண்டிருக்கிறார் என்று சொல்லுறார். இதைத் தொடர்ந்து அங்கிள் நீங்க வாங்க போகலாம் என்று சொல்லுறார். அதுக்கு மீனா இருங்க ரோகிணி இதுக்கு மேல நீங்க எதையும் மறைக்க முடியாது என்று சொல்லுறார்.


இதுக்கு மேலயும் பொய்ய மறைக்கிறது உங்களுக்குத் தான் பிரச்சனை என்று சொல்லுறார். அதுக்கு விஜயா இங்க என்ன தான் நடக்குது என்று கேக்கிறார். அதைக் கேட்ட முத்து அம்மா கொஞ்சம் இருங்க எதுக்கு இவளா அவசரப்படுறீங்க என்று கேக்கிறார். மேலும் இவர் மலேசியா மாமா எல்லாம் கிடையாது இவர் கறிக் கடை வச்சிருக்கிற ஆளு என்று ரோகிணிட அங்கிளப் பார்த்துச் சொல்லுறார்.

இதைத் தொடர்ந்து ரோகிணிட அங்கிள் எல்லாருகிட்டையும் மன்னிப்புக் கேக்கிறார். மேலும் முத்து சொன்ன மாதிரி நான் மலேசியா எல்லாம் போகல நான் கறிக் கடை தான் வச்சிருக்கேன் என்று சொல்லுறார். அதைக் கேட்ட மனோஜ் கோபத்துடன் அப்ப நீங்க ரோகிணிட மாமா இல்லையா என்று கேக்கிறார். இதனை அடுத்து அண்ணாமலையும் விஜயாவும் ரோகிணிய ஏன் இப்படி செய்தனீ என்று சொல்லி அடிக்கிறார்கள். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement