• Jan 19 2025

ரசிகராக மாறி கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்த ரோபோ சங்கர்.. எந்த படத்திற்கு தெரியுமா?

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’இந்தியன்’ திரைப்படம் இன்று ரீரிலீஸ் ஆகயிருப்பதை அடுத்து ரசிகர்கள் மற்றும் திரை உலகினர் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக காமெடி நடிகர் ரோபோ சங்கர் சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் ’இந்தியன்’ திரைப்படத்தின் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த 1996 ஆம் ஆண்டு கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, ஊர்மிளா, கவுண்டமணி, செந்தில், மனோரமா உள்பட பலரது நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் உருவான ’இந்தியன்’ திரைப்படம் வெளியானது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் ’இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி அடுத்த மாதம் 12ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் ’இந்தியன்’ திரைப்படத்தின் முதல் பாகம் இன்று ரீரிலீஸ் ஆகிறது. இதனை அடுத்து திரையரங்குகளில் கமல்ஹாசன் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை கமலா தியேட்டரில் ’இந்தியன்’ தாத்தாவுக்கு வைத்த கட்-அவுட்டுக்கு நடிகர் ரோபோ சங்கர் பாலாபிஷேகம் செய்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சமீபத்தில் தனது மகளின் திருமணத்தை அடுத்து கமல்ஹாசனை குடும்பத்துடன் நேரில் சந்தித்த ரோபோ சங்கர், கமல்ஹாசன் குறித்து பெருமையாக பேசி இருந்த நிலையில் தற்போது இந்தியன் படத்தின் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement