தமிழ் திரையுலகத்தில் கடந்த சில மாதங்களாகவே தொழிலாளர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வருகின்றன. சமீபத்தில் வெளியான நேர்காணலில், பெப்சித் தலைவர் ஆர்.கே.செல்வமணி தனது கோரிக்கைகளை நேரடியாக உணர்ச்சிபூர்வமாக வெளிப்படுத்தியுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, “தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும், நடப்புத் தயாரிப்பாளர் சங்கமும் இணைந்து செயல்பட வேண்டும்” எனக் கூறியுள்ளார். மேலும் “இரண்டு தயாரிப்பாளர் சங்கங்கள் தனித்தனியாக செயல்படுவது, தொழிலாளர்களுக்கும், சினிமாவுக்கும் நல்ல தல்ல என்றதுடன் இரண்டும் இணைந்து செயல்பட வேண்டும்" எனவும் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், தமிழ்த் திரைப்படத் துறையில் உள்ள பிளவுகள் மற்றும் குழப்பங்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதனை அறியமுடிகிறது. அத்துடன் “மணிரத்தினம், கமல், சிம்பு, தனுஷ் ஆகியோர் நடித்த படங்களை நிறுத்த சொல்லுகிறார்கள்? அதை ஏன் எங்களிடம் சொல்லுகிறார்கள் என்று தெரியவில்லை"எனவும் கூறியுள்ளார்.
மேலும் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சங்கத்திற்கு இடையே உள்ள சண்டையில் பெப்சி அமைப்பை அடியாட்கள் போல பயன்படுத்த வேண்டாம் எனவும் கூறியுள்ளார். இத்தகவல் தற்பொழுது அனைத்து சமூக ஊடகங்களிலும் வைரலாகி வருகின்றது.
Listen News!