தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான அஜித் குமார் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் "குட் பேட் அக்லி". இப்படம் பற்றிய ஒவ்வொரு அப்டேட்டும் அஜித் ரசிகர்களுக்கு படத்தை திரையில் பார்ப்பதற்கான எதிர்பார்ப்பை உருவாக்கி வருகின்றது. இப் படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா ,பிரபு ,பிரசன்னா ,அர்ஜுன்தாஸ் போன்ற திரை உலகுமே நடித்துள்ளது.
இந்த படத்தில் அஜித் மூன்று வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஏப்ரல் 10 ஆம் திகதி திரையரங்குகளில் வரவுள்ள நிலையில் தற்போது படம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் இப் படத்திற்கு ஜி .வி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
அந்த வகையில் இன்று வெளியான தகவல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது படத்தின் இரண்டாவது பாடல் 'God Bless U' வெளியானது ஜிவி பிரகாஷ் இசையில் அனிருத் மற்றும் பால் டப்பா இந்த பாடலை பாடியுள்ளனர்.
Listen News!