நெப்போலியன் மகன் தனுஷுக்கும் திருநெல்வேலியைச் சேர்ந்த அக்ஷயா என்பவருக்கும் நேற்றைய தினம் ஜப்பானில் பிரம்மாண்டமாக திருமணம் நடந்து முடிந்தது. இந்த திருமணத்திற்கு பல கோடிகளை செலவு செய்துள்ளார் நெப்போலியன்.
தனுஷின் திருமணத்திற்காக சினிமா பிரபலங்களான மீனா, கலா மாஸ்டர், குஷ்பூ, ராதிகா, சரத்குமார், கார்த்திக் என பலரும் நேரடியாகவே கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியிருந்தார்கள். இவர்களுடைய திருமண புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது.
d_i_a
திருமணத்தின் போது தனுஷால் தாலி கட்ட முடியாது என்பதால் தாலிச் செயினை தனுஷின் கையைப் பிடித்து அவருடைய அம்மா எடுத்துக் கொடுக்கவே திருமணம் நடைபெற்றது. இந்த வீடியோ வெளியானதில் இருந்து பலரும் தனுஷின் நோய் குறித்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றார்கள்.
இந்த நிலையில், இது தொடர்பில் பிரபல மருத்துவர் ஜெயஸ்ரீ அளித்த பேட்டியில், தனுசுக்கு தசைச்சிதைவு நோய் காணப்படுகின்றது. அவருடைய உடம்பில் மசில்ஸ் இருக்கும். அது அவரும் வளர வளர சேர்ந்து வளரும். ஆனால் இந்த நோய் இருப்பவர்களுக்கு ஜீனிலையே இந்த பிரச்சனை இருக்கும். அது பிறக்கும்போதே இருக்கும்..
தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர் வளர வளர மசில்சைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிடும். இந்த நோய் ஒரு குழந்தைக்கு இருக்கின்றது என்பதே நான்கு வயதில் தான் தெரிய வரும். கர்ப்பத்தின் போது ஸ்கேன் எடுத்து பார்ப்பார்கள். ஆனால் அதில் உடல் உறுப்புக்கள் எல்லாம் நன்றாக வளர்ந்து இருக்கின்றதா என்று தான் பார்க்க முடியும். எந்த நோயால் குழந்தை பாதிக்கப்பட்டுள்ளது என்பதை சொல்ல முடியாது. மேலும் தசைச் சிதைவு நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த நோய் இருப்பவர்களால் இல்லற வாழ்க்கையில் ஈடுபட முடியாது. ஆனாலும் டெஸ்ட் டியூப் மூலம் குழந்தையைப் பெறலாம். அதிலும் ஒரு சிறிய சிக்கல் உள்ளது. தனுஷுக்கு இந்த நோய் உள்ளதால் கருவிற்கும் இந்த நோய் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனாலும் விந்தணுவை எடுத்து பரிசோதித்தால் கருமுட்டையில் என்ன நோய் இருக்கும் என்பது தெரிந்து விடும். ஆனாலும் நோய் பாதிப்பு இல்லாத கருமுட்டை எடுத்து குழந்தையை உருவாக்கலாம் என்று குறித்த மருத்துவ கூறியுள்ளார்.
Listen News!