• Jun 12 2026

கவர்ச்சியான போட்டோ ஷூட்டால் இணையத்தை ஸ்தம்பிக்க வைத்த ரெஜினா… வைரலாகும் ஹாட் ஸ்டில்ஸ்.!

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள நடிகை ரெஜினா கசாண்ட்ரா, எப்போதும் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். 


கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிக்க விரும்பும் அவர், தற்போது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் அப்டேட்கள் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பேசப்பட்டு வரும் நிலையில், ரெஜினாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கி வருகின்றன.


சமீபத்தில் கிளாமரான மற்றும் ஸ்டைலிஷ் தோற்றத்தில் அவர் நடத்திய புதிய போட்டோஷூட் ரசிகர்களின் கவனத்தை முழுவதுமாக ஈர்த்துள்ளது. மாடர்ன் உடையில் போஸ் கொடுத்துள்ள ரெஜினாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. 


குறிப்பாக அவரது ஸ்டைல், முகபாவனை மற்றும் கவர்ச்சியான லுக் ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இந்த புகைப்படங்களுக்கு ஆயிரக்கணக்கில் லைக்குகளும் கமெண்ட்ஸ்களும் குவிந்து வருகின்றன. சினிமாவிலும், சமூக வலைத்தளங்களிலும் தொடர்ந்து டிரெண்டாகி வரும் ரெஜினா கசாண்ட்ரா தற்போது மீண்டும் ரசிகர்களின் கவனத்தை முழுமையாக கைப்பற்றியுள்ளார்.


Advertisement

Advertisement