தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து அரசியலிலும் வெற்றிகரமாக பயணம் செய்து வரும் நடிகர் விஜய் குறித்து அவரது அத்தை மகள் விமலா ராணி பகிர்ந்துள்ள உணர்ச்சிபூர்வமான கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

அவர் அளித்த பேட்டியில், “விஜய்யின் தங்கை வித்யா உயிரிழந்த சமயத்தில் நானும் மிகவும் சிறியவளாக தான் இருந்தேன். ஆனால் வித்யா அனுபவித்த வேதனை எவ்வளவு பெரியது என்பதை அப்போது உணர முடிந்தது. வித்யா உடல்நலப் பிரச்சினையால் மிகவும் கஷ்டப்பட்டார். வீட்டில் எப்போதும் மாத்திரைகள், ஊசிகள் இருந்ததை பார்த்திருக்கிறேன். உடன் பிறந்தவர்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய பலம். அந்த பலத்தை விஜய் இளம் வயதிலேயே இழந்துவிட்டார்.” என்று உருக்கமாக கூறினார்.
மேலும், “ஒரு தங்கையை இழந்த வேதனை விஜய்யின் மனதில் எப்போதும் இருக்கும். ஆனால் இன்று அவர் பல லட்சம் ரசிகர்களின் அண்ணனாகவும், பல பெண்களின் பாதுகாப்பான சகோதரராகவும் மாறியிருக்கிறார். அவர் இழந்த அன்பு இன்று பல மடங்கு திரும்பி வந்திருக்கிறது,” என்றும் தெரிவித்தார்.
விமலா ராணியின் இந்த உருக்கமான பேச்சு ரசிகர்களிடையே பெரும் உணர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
Listen News!