• May 20 2026

சிந்தாமணியை சபித்த விஜயா.. ரவியை குடும்பத்தை விட்டுப் பிரிக்க திட்டமிடும் ஸ்ருதி அப்பா.!

shali / 1 hour ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசொட்டில், விஜயா பார்வதியைப் பார்த்து சிந்தாமணி கிட்ட நாம எவ்வளவு நல்லா பழகினோம் ஆனா, அவள் செய்த துரோகம் எல்லாம் உனக்குத் தெரியணும் என்று தான் உன்ன சிந்தாமணி வீட்ட கூட்டிகொண்டு வந்தேன் என்கிறார். அதைக் கேட்ட பார்வதி அது எனக்கு எப்பவோ தெரியும் உனக்குத் தான் இப்ப தெரிஞ்சிருக்கு என்று சொல்லுறார்.

அதைக் கேட்ட விஜயா கோபத்தோட சிந்தாமணியை கூப்பிடுறார். அதைத் தொடர்ந்து விஜயா சிந்தாமணியைப் பார்த்து உன்ன மாதிரி ஒரு துரோகியை பார்த்ததே இல்ல என்று சொல்லுறார். மேலும் நீயெல்லாம் நல்லாவே இருக்கமாட்ட என்று சாபம் போடுறார். அதைக் கேட்ட சிந்தாமணி எதுவுமே தெரியாத மாதிரி நடிக்கிறார். பின் விஜயா பைனான்சியர் விஷயத்தை சொல்லிப் பேசுறார். 


அதனை அடுத்து சிந்தாமணி வீட்டுக்கு கட்ட வேண்டிய பணத்தை கட்டிட்டு இங்க வந்து கதையுங்க இப்ப இங்கிருந்து கிளம்புங்க என்று சொல்லுறார். அதைக் கேட்ட விஜயா உன்ர திமிர் அடங்கிறப்போ உனக்காக யாருமே இருக்கமாட்டாங்க என்கிறார். மேலும், உன்ர பொண்ணு ஒன்னும் இல்லாத வெறும் பையன் கூட தான் ஓடிப்போவாள் என்று கோபமாக சொல்லிட்டு அங்கிருந்து கிளம்புறார் விஜயா.

மறுபக்கம் ரவி வீட்டு கடனை அடைக்க என்னால உதவி செய்ய முடியாமல் இருக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு என்று ஸ்ருதி கிட்ட சொல்லுறார். பின் ஸ்ருதியோட அப்பா ரவி குடும்பத்துக்கு 10 லட்சம் காசு தாறேன் நீங்க எங்க வீட்டிலேயே இருங்க என்று சொல்லுறார். அதைக் கேட்ட ரவி கோபப்படுறார். அதைத் தொடர்ந்து ரவி மீனா வீட்ட வந்து ஸ்ருதி வீட்ட நடந்ததெல்லாத்தையும் சொல்லுறார். அதைக் கேட்ட அண்ணாமலையும் விஜயாவும் கோபப்படுகிறார்கள். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement