• Nov 06 2024

வனிதாவின் சிபாரிசில் பிக் பாஸ் சென்ற ரவீந்தர்..? தங்க மனசை பாராட்டும் ரசிகர்கள்

Aathira / 4 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வனிதா விஜயகுமார் என்றாலே அவர் சர்ச்சைக்கு பெயர் போனவராகவே காணப்படுகின்றார். ஆரம்பத்தில் படங்களில் ஹீரோயினாக நடித்த இவர், நாளடைவில் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக சினிமா துறையில் இருந்து விலகி இருந்தார்.

வனிதாவின் திருமண வாழ்க்கையும் சரியாக அமையாத காரணத்தினால் அதற்கு பிறகு தனது கேரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதன்படி சமையல் செய்து youtube இல் வெளியிடுவது, சமையல் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வது என பிரபலமாக காணப்பட்டார். அதன் பின்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலம் அடைந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு வனிதா விஜயகுமாருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. சமீபத்தில் இவர் ரோபோட் மாஸ்டருடன் படம் ஒன்றில் கமிட் ஆனார். அது இவருடைய சொந்த தயாரிப்பாக காணப்பட்டது. எனினும் ரசிகர்களையும் பிரபலங்களையும் குழப்பும் விதமாக போஸ்ட் ஒன்றை பகிர்ந்து இருந்திருந்தார். பலரும் இதனை பார்த்து வனிதாவுக்கு கல்யாணம் என வாழ்த்தி வந்தார்கள்.


ஆனாலும் அதற்கு பிறகு அது படத்திற்காக செய்யப்பட்ட ப்ரமோஷன் என்று கூறினார். எனினும் ரசிகர்கள் அவரை விட்டு வைப்பதாக இல்லை. அடுத்த கல்யாணம் எப்போது என்றே கேட்டு  வருகின்றார்கள். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் பிரபல சேனல் ஒன்றுக்கு ரிவியூ கொடுத்து வருகின்றார்.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக சென்றுள்ள தயாரிப்பாளர் ரவீந்தர் தனது ரெக்கமண்டேஷனில் தான் சென்றதாக தெரிவித்துள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில், பாஸ்ட் இஸ் பாஸ்ட். ரவீந்தர் என் தம்பி மாதிரி. நான் தான் சிபாரிசு செஞ்சு தான் பிக் பாஸுக்கு அனுப்பி இருக்கேன். அவர ரெண்டு வருஷமா கூப்பிட்டாங்க. ஆனா அவரால போக முடியல. போகணும்னு நினைக்கும் போது சரியா பதில் சொல்லல. அப்புறம் நான் தான் சிபாரிசு செஞ்சேன் என்று தெரிவித்து உள்ளார்.

பீட்டர் விஷயத்தில் தன்னை எவ்வளவோ விமர்சனம் செய்ததை கூட வனிதா மறந்து இதை செய்துள்ளார் என்று வனிதாவின் ரசிகர்கள் அவரை பாராட்டி வருகிறார்கள்.

Advertisement

Advertisement