• Jan 19 2025

விஜய் டிவி தொகுப்பாளார் மாகாபா மீது பாய்ந்த வழக்கு! சின்னத்திரையில் பரபரப்பு சம்பவம்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுள் ஒருவராக காணப்படுபவர் தான் மாகாபா ஆனந்த். இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் பெரும்பாலும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகின்றன. அதிலும் இவரும் பிரியங்காவும் சேர்ந்து செய்யும் அலப்பறைகள் வேற லெவலில் காணப்படும்.

சிவகார்த்திகேயனுக்கு அடுத்தபடியாக விஜய் டிவியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் தான் மாகாபா ஆனந்த். விஜய் டிவியின் நிகழ்ச்சிகளை தவிர தமிழகத்தில் பிற பகுதிகளுக்கு சென்று நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவார்.

அது மட்டும் இன்றி வெளிநாடுகளுக்கும் விசிட் அடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இவர் ஒரு சில படங்களில் துணை கேரக்டராக  நடித்துள்ளதோடு ஹீரோவாகவும் நடித்துள்ளார். ஆனாலும் அவை ரசிகர்களிடையே வரவேற்பை பெறாத நிலையில் மீண்டும் சின்னத்திரையில் ஐக்கியமாகியுள்ளார்.


இந்த நிலையில்,  விஜய் டிவி தொகுப்பாளரான மாகாபா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்த தகவல் சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகின்றது.

அதாவது திருச்சியில் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கிய மாகாபா ரோட்டில் பிரம்மாண்டமான செட் போட்டு அந்த நிகழ்ச்சி நடத்தியதாக கூறப்படுகிறது.  குறித்த இடத்திற்கான அனுமதியை பெறாமல் நடத்தப்பட்டதால் உரிய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement