• Jan 18 2025

இங்க என்ன நடக்குது! பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து வீடியோ வெளியிட்ட நடிகர்

Sam / 3 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது. இதில் புதிய போட்டியாளர்களை விஜய் சேதுபதி அறிமுகம் செய்து வைத்தார்.


இதை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போட்டியாளர்களுக்கு முதல் நாளே பீதியை கொடுக்கும் வகையில் 24 மணி நேரத்திற்குள் ஒருவர் வெளியேற்றப்படுவார் என்று கூறப்பட்டது. அதன்படி ஒருவரை ஒருவர் மாறி மாறி எலிமினேட் செய்ய ஆரம்பித்தார்கள்.


இறுதியில் விஜய் சேதுபதியின் மகளான சச்சனா தான் இதில் சிக்கிக்கொண்டார். அதாவது மகாராஜா படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்த சச்சனா எலிமினேட் செய்யப்பட்டார். இது பலருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அத்துடன் சமூக வலைதள பக்கங்களிலும் 24 மணி நேரத்திற்குள் எப்படி எலிமினேட் செய்ய முடியும் என விவாதங்கள் எழுந்தன.


தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் பெண்கள், ஆண்கள் என இரு அணிகளும் முட்டி மோதி வருகின்றார்கள். ஆனாலும் பெண்கள்  தமது அணிக்கு உள்ளையே அதிகமாக சண்டை போடுவதை இன்று வெளியான ப்ரோமோ எடுத்துக்காட்டி இருந்தது.


இந்த நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக சென்ற ஜீ தமிழ் சீரியல் நடிகர் சத்யா, தான் யாருக்கும் தெரியாமல் போன் கொண்டு வந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


இதை பார்த்த ரசிகர்கள் இது உண்மையா? பொய்யா? என்று ஒரு பக்கம் புலம்பினாலும் இனிதான் ஆட்டம் சூடு பிடிக்க போகின்றது என்று கமெண்ட் பண்ணி வருகின்றார்கள். மேலும் சத்யா அந்த வீடியோவில் இங்கு என்ன நடக்கிறது என்பதை உங்களுக்கு தெரிவிக்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement