• Aug 07 2026

திடீரென ரசிகர்கள் பக்கம் சாய்ந்த ரவி .. சபரிமலை தரிசனத்துக்கு பிறகு பகிர்ந்த முதல் பதிவு

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வந்த ரவி மோகன், சமீப காலமாகவே தனது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான விஷயங்களால் அதிக அளவில் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றார். ஆனால் தற்போது அவர் ஆன்மீகப் பயணங்களில் ஈடுபட்டதன் காரணமாக சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், எந்த ஒரு கிசுகிசு தகவல்களிலும் சிக்காத சிறந்த மனிதராகவும் திகழ்ந்து வந்தவர் ரவி மோகன். ஆனால் சமீப காலமாகவே அவரைச் சுற்றி பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இவர் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஆனாலும், தனது திருமண வாழ்க்கையில் நிறைய கொடுமைகளை அனுபவித்ததாக கூறி, தன்னுடைய குடும்பத்தை விட்டு தனியாகப் பிரிந்து வந்ததோடு, ஆர்த்திக்கு விவாகரத்து வழங்குவதாகவும் அதிர்ச்சி கொடுத்தார்.

எனினும், அதற்கு பின்பு பாடகி கெனிஷாவுடன் நெருக்கம் காட்டியது பல விவாதங்கள் எழுவதற்கு காரணமானது. அது மட்டுமில்லாமல், இருவரும் பொது நிகழ்ச்சிகள், கோவில்கள், சுற்றுலாத் தளங்கள் என அனைத்திற்கும் ஒன்றாகச் சென்று பலரது விமர்சனங்களையும் வெறுப்பையும் சம்பாதித்தனர்.


ஒரு கட்டத்தில், தன்னைப் பற்றிய நெகட்டிவ் விமர்சனங்களுக்கு ஈடுகொடுக்க முடியாத கெனிஷா, தான் ரவியை விட்டு விலகுவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு விட்டு சென்னையை விட்டு புறப்பட்டார். அதற்கு பின்பு ரவி மோகன் அழுது புலம்பி பதிவு வெளியிட்டதும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதைத்தொடர்ந்து, ரவி மோகன் நிம்மதி தேடி ஆன்மீக யாத்திரைகளை மேற்கொண்டு வருகின்றார்.

இந்த நிலையில், ரவி மோகன் தற்போது சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்றுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. கருப்பு நிற உடையில் எளிமையாக காணப்பட்ட அவர், பக்தர்களுடன் இணைந்து சாமி தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement