தெலுங்கு திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தை பெற்ற நடிகர் ராம் சரண் தற்பொழுது தனது 16வது படத்தில் நடித்து வருகின்றார். 'RRR' திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ராம் சரண் எடுத்து நடிக்கும் படங்கள் மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் நடித்து வரும் புதிய திரைப்படத்திற்கு 'பெத்தி' என்ற அழகான பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை 'உப்பே' திரைப்படம் மூலம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியை பெற்ற இயக்குநர் புச்சி பாபு இயக்கி வருகின்றார். ஆரம்பத்திலிருந்தே இத்திரைப்படம் பல்வேறு காரணங்களால் ஹைலைட்டாக மாறியுள்ளது. அதிலும் இப் படத்தில் பாலிவுட் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் கதாநாயகியாக இணைந்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
'பெத்தி' படத்தின் மூலம் ராம் சரணுடன் ஜான்வி கபூர் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடிக்கிறார். இந்த புதிய கூட்டணி ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜான்வி கபூர் கடந்த சில வருடங்களாக தென்னிந்திய திரையுலகிலும் தன் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றார். இதற்குள் ஜூனியர் என்.டி.ஆர் உடன் 'தேவாரா' படத்திலும் ஜான்வி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் ரிலீஸ் திகதியும் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'பெத்தி' திரைப்படம் 2026ம் ஆண்டு மார்ச் 27ம் திகதி உலகம் முழுவதும் வெளியிடப்பட இருக்கின்றது. இந்த அறிவிப்புடன் ரசிகர்களிடம் படத்தைப் பார்ப்பதற்கான எதிர்பார்ப்பு மேலும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
'பெத்தி' ரிலீஸாகும் நாளிற்கு முதல் நாளான மார்ச் 26ம் திகதி, தெலுங்கு சினிமாவின் மற்றொரு முன்னணி நடிகர் நானி நடித்துள்ள 'தி பாரடைஸ்' திரைப்படம் ரிலீஸாகின்றது. இதனால் தென்னிந்திய திரையுலகில் ராம் சரண் மற்றும் நானியின் படங்கள் நேரடியாக மோதவிருக்கின்றன. இரண்டு பெரும் பிரபலங்களின் படம் ஒரே காலக்கட்டத்தில் திரைக்கு வருவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
Listen News!