• Oct 15 2026

ரஜினி படத்துக்காக தூக்கத்தைத் தொலைத்த சிவகார்த்திகேயன்.. வெளியான பதிவு இதோ.!

shali / 1 hour ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீது தனக்குள்ள அன்பையும், அவரது திரைப்படங்கள் மீதான எதிர்பார்ப்பையும் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள இந்தக் கருத்துக்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகின்றன.

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் இன்று வெளியாகும் நிலையில், படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களைப் போலவே தானும் மிகுந்த உற்சாகத்தில் இருப்பதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது வாழ்த்துச் செய்தியில், “சூப்பர் ஸ்டார் படம் வெளியீட்டுக்கு முந்தைய நாள் எல்லா ரசிகர்களுக்கும் ஏற்படுவதைப் போலவே படபடப்பு, உற்சாகம், தூக்கம் இல்லாத ஆர்வம் போன்றவற்றை உணர்கிறேன். தலைவா, இதுதான் நீங்கள் தொடர்ந்து நிகழ்த்தும் அற்புதம்.

என்றும் உங்கள் மீது நான் கொண்டிருக்கும் அன்பு மாறாது. நெல்சன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்க வாழ்த்துகள்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீதான தனது அன்பை சிவகார்த்திகேயன் இவ்வாறு வெளிப்படுத்தியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, ரஜினியின் திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு ஒரு ரசிகனாகத் தான் உணரும் பரபரப்பை அவர் வெளிப்படையாகப் பகிர்ந்திருப்பது பலரையும் கவர்ந்துள்ளது.

‘ஜெயிலர்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் அடுத்த பாகமான ‘ஜெயிலர் 2’ மீதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இந்நிலையில், சிவகார்த்திகேயனின் வாழ்த்துச் செய்தியும் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

Advertisement

Advertisement