• Apr 26 2024

தமிழக முதல்வர் ஸ்டாலின் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட ரஜினிகாந்த்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது 70வது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக சார்பில், சென்னை பாரிஸ் கார்னர் பகுதியில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டலின் அவர்களின் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

எங்கள் முதல்வர் எங்கள் பெருமை – எனும் தலைப்பில் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70 ஆண்டுகால பயணம் பற்றிய புகைப்பட தொகுப்பு இந்த கண்காட்சியில் இடம் பெற்று உள்ளது.

இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் யோகி பாபு உள்ளிட்டோர் இந்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டனர்.

புகைப்படம் உணர்த்தும் வரலாற்றை ரஜினியிடம் அமைச்சர் சேகர்பாபு எடுத்துரைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement

Advertisement