• Mar 23 2023

"விஜய் அப்பா பையனா?, அம்மா பையனா?".. ஷோபா என்ன சொன்னாரு தெரியுமா?இந்த பதில எதிர்பாக்கலயே!....

Jo / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய். இவரது நடிப்பில், வாரிசு திரைப்படம் வெளியாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்திலும் விஜய் நடித்து வருகிறார்.

நடிகர் விஜய்யின் தந்தை S.A. சந்திரசேகர் திரைப்பட இயக்குனராக உள்ளார். அவரது இயக்கத்தில் ஆரம்ப காலகட்டத்தில் திரைப்படங்கள் நடித்து புகழ் பெற்றதன் மூலம் சிறந்த நடிகர் என்று தமிழ் சினிமாவில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் விஜய்.

அதே போல, விஜய்யின் தாயார் ஷோபாவும் பாடகியாக வலம் வருகிறார். ஷோபா தமிழ் திரையுலகில் பல கிளாசிக் ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார்.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் தாயார், ஷோபா சந்திரசேகர், தற்போது சேனல் ஒன்றுக்கு பிரத்தியேக பேட்டி அளித்தார். பிரபல நடிகையும், இயக்குநரும், சமூக ஆர்வலருமான லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் நேர்காணல் செய்தார். இதில், தனது கணவர் S.A. சந்திரசேகர் மற்றும் மகன் விஜய் குறித்தும், தனது குடும்பத்தினர் குறித்தும் என பல சுவாரஸ்ய பதில்களை ஷோபா சந்திரசேகர் பகிர்ந்து கொண்டார். 

மேலும், "மகன் விஜய்யை மாஸ் ஹீரோவாக பிடிக்குமா?.. அல்லது ரொமான்டிக் ஹீரோவாக பிடிக்குமா?" என லட்சுமி ராமகிருஷ்ணன் கேட்க, "மாஸ் ஹீரோவா ரொமான்டிக் பண்றது பிடிக்கும்" என ஒரு அதிரடி பதிலை ஷோபா தெரிவிக்கிறார். தொடர்ந்து பேசிய லட்சுமி ராமகிருஷ்ணன், "பயங்கரமான ஆளு (சிரித்தபடி). விஜய் வந்து அப்பா பையனா?.. அம்மா பையனா?" என அடுத்த கேள்வியை முன் வைக்கிறார்.இதற்கும் அசத்தலான பதில் ஒன்றை ஷோபா தெரிவித்தார். "விஜய் எங்க பையன்" எனக் கூறியதுமே வியந்து பார்த்து சிரிக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன், "பயங்கர டிப்ளமேட்டிக் இல்ல மேம்" என்கிறார். "அப்படி எல்லாம் இல்ல. தனியா அப்படி சொல்ல முடியாதுல்ல. அவருக்கு ரெண்டு பேரையும் பிடிக்கும். அதனால எங்க பையன்" என விளக்கம் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement