திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டார், கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், இன்று ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஏழுமலையான் கோவிலில் குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

தனது 75வது பிறந்தநாளை நேற்று கொண்டாடிய நிலையில், அதனைத் தொடர்ந்து ஆன்மிக வழிபாட்டில் ஈடுபடும் வகையில் திருப்பதிக்கு அவர் சென்றுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை நேரத்தில் தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றார். அவரது வருகையை முன்னிட்டு திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் சார்பில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

கோவில் வளாகத்தில் அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்ட நிலையில், எந்தவித இடையூறும் இல்லாமல் அவர் சாமி தரிசனம் செய்யும் வகையில் தேவஸ்தான அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
75 வயதிலும் தன்னுடைய எளிமை, பணிவு மற்றும் ஆன்மிக ஈடுபாட்டால் ரசிகர்களின் மனதில் உயர்ந்து நிற்கும் நடிகர் ரஜினிகாந்த், மீண்டும் ஒருமுறை தனது தனித்துவத்தை நிரூபித்துள்ளார். அவரது திருப்பதி ஏழுமலையான் தரிசனம், ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஒரு ஆன்மிக ஊக்கமாக அமைந்துள்ளது.
Listen News!