• Dec 19 2025

சரவணன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் மயில் அப்பா.! கோமதி எடுத்த திடீர் முடிவு.!

subiththira / 6 days ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, பாண்டியன் மயில் அப்பா கிட்ட நான் சொன்ன ஒரு வார்த்தைக்காகத் தான் இவன் உங்க பொண்ணு கழுத்தில தாலி கட்டினவன். இப்ப அவனுக்கு நான் அமைச்சுக் கொடுத்த வாழ்க்கை சரிந்து போய் இருக்கு என்கிறார் பாண்டியன். அதனை அடுத்து என்னோட பையன் வாழ்க்கையை இனி எப்புடி சரி செய்யப்போறேன் என்று கோபமாக கேட்கிறார். 


பின் மயிலோட அம்மா சந்தர்ப்ப சூழ்நிலையால தான் இப்புடி எல்லாம் நடந்தது என்கிறார். மேலும் மன்னித்துவிட்டிடுங்க என்கிறார் மயில் அம்மா. அதைக் கேட்ட சரவணன் இவங்களுக்கு மட்டும் மன்னிப்புக் கொடுக்கவே கூடாது என்கிறார். பின் மயில் அப்பா சரவணனோட காலில விழுந்து மன்னிப்புக் கேட்கிறார். அதைப் பார்த்த கோமதி இவங்களை எல்லாம் நம்பாதீங்க என்கிறார்.

இதனை அடுத்து பாண்டியன் இனி பேசுறதுக்கு ஒன்னும் இல்ல மயிலை இங்க இருந்து கூட்டிட்டுப் போங்க என்று கோபமாகச் சொல்லுறார். அதைக் கேட்ட மயில் அம்மா இப்புடி திடீர் என்று கூட்டிட்டு போகச் சொல்லுறது ரொம்ப தப்பு என்கிறார். பின் மயில் எல்லாருகிட்டயும் கெஞ்சிக் கொண்டிருக்கிறார். மறுபக்கம் மயில் அம்மா அவளை இங்கிருந்து கூட்டிக்கொண்டு போகமாட்டேன் என்கிறார்.


அதுக்கு கோமதி நீங்களா உங்க பொண்ணை கூட்டிக் கொண்டு போன மரியாதை என்கிறார். பின் சரவணன் அப்பா உன்ன மன்னிக்கிற முடிவெடுத்தால் நான் வீட்டை விட்டு வெளியே போகலாம் என்று முடிவெடுத்தேன் நல்ல வேளை அப்பாவே உன்ன வெளிய போக சொல்லிட்டார் என்கிறார். பின் குழலி எல்லாரையும் வெளியே துரத்திவிடுறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement