பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, பாக்கியம் மயிலைப் பார்த்து நான் ஏதோ மனவேதனையில உன்கிட்ட அப்புடி பேசிட்டன் எதுவும் மனசில வைச்சிருக்காத என்கிறார். அந்த நேரம் பார்த்து மயிலோட அப்பா வந்து நம்ம வீட்டுக்கு மாப்பிள்ளை வீட்டில இருந்து வண்டி வந்து நிக்குது என்கிறார். அதைக் கேட்ட மயில் தன்னை ஏற்றிக் கொண்டு போறதுக்கு தான் வண்டி வந்து நிக்குது என்று சொல்லிட்டு வெளியில போய் பார்க்கிறார்.

பின் சரவணன் வீட்டில இருந்து பொருட்கள் எல்லாம் வந்து இருக்கிறதைப் பார்த்த மயில் ஷாக் ஆகுறார். அதைத் தொடர்ந்து மயில் சரவணன் வாங்கிக் கொடுத்த புடவையைப் பார்த்து அழுது கொண்டிருக்கிறார். மறுபக்கம் கோமதி பழனியைப் பார்த்து என்ர பிள்ளைக்கு இப்புடி ஆச்சே என்று கவலையா இருக்கு என்கிறார். மேலும் அவன் சந்தோசம் மொத்தத்தையும் குழி தோண்டி புதைச்சிட்டா என்கிறார் கோமதி.
அதனை அடுத்து மயில் கோமதிக்கு போன் எடுக்கிறதைப் பார்த்த உடனே கோபப்படுறார். பின் எல்லாரையும் மயிலோட நம்பரை பிளாக் பண்ணச் சொல்லுறார். அதைத் தொடர்ந்து கோமதி இவளின்ட தொல்லையில இருந்து தப்பிக்க வீட்டை மாத்திக் கொண்டு போவமா என்று பழனி கிட்ட கேட்கிறார். பின் ராஜி பழனியைப் பார்த்து நான் கொடுத்த Letter-ஐ அப்பா கிட்ட கொடுத்திட்டீங்களா என்று கேட்கிறார்.

அதுக்கு பழனி அவங்க கிட்ட கொடுத்திட்டன். அதைப் படிச்சுட்டு ஒரே பீல் பண்ணுறாங்க என்கிறார். மேலும் இதை ஒரு ஆரம்பமா வைச்சு நீங்க ரெண்டு பேரும் பிறந்த வீட்டோட சேர்ந்திட்டீங்க என்றால் அதுவே போதும் என்கிறார் பழனி. இதைக் கேட்ட ராஜி நான் போய் அவங்க கிட்ட பேசிட்டு வாறன் என்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!