• Apr 15 2026

அடுத்த கல்யாணத்துக்கு ஓகே சொன்ன மனோஜ்.! வீட்டில் வெடித்த புதிய பூகம்பம்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில் ,  ஊரிலிருந்து பாட்டி வீட்டிற்கு வந்து,  மீனாவுக்கு நடந்த ஆக்சிடென்ட் பற்றியும் ரோகிணி பற்றியும்  ஏன் எனக்கு சொல்லவில்லை என்று விசாரிக்கின்றார். 

அதற்கு பிறகு மனோஜை அழைத்து ஆறுதல் கூறுகின்றார். மேலும் இதனை விஜயா தான்  சொல்லி வந்ததாகவும் பாட்டி சொல்ல,  மனோஜ்க்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் அதற்காகத்தான் உங்களை வரச் சொன்னேன் என்று விஜயா சொல்கின்றார். 

ஆனாலும் இது மனோஜ்  எடுக்கவேண்டிய முடிவு என்று பாட்டி சொல்ல, அம்மா எனக்கு நல்லது தான் பண்ணுவார் என்று அவரும் சம்மதம் தெரிவிக்கின்றார்.  அதற்கு பிறகு பாட்டி ஊருக்கு கிளம்பி செல்கின்றார். 

இதை தொடர்ந்து  முத்து  மீனாவை சமாதானம் பண்ணுவதற்காக அல்வா செய்து கொடுக்கின்றார். ஆனால் அது வாயில் வைக்க முடியாத அளவிற்கு  இருக்கின்றது.  அதன் பின்பு ரோகிணி தங்களை பார்த்து மிரட்டி விசயத்தை  முத்துவிடம் மீனா  சொல்லுகின்றார். 


அடுத்த நாள்   மனோஜ் மறந்து ரோகிணியின் பெயரை சொல்ல,  வீட்டில் உள்ள ரோகிணியின்  போட்டோ பிரேமை போட்டு உடைத்த விஜயா அதிலிருந்து ரோகினியின் போட்டோவை கிழித்து எடுத்து, அதனை எரித்து அவளுக்கு கொல்லி வைக்குமாறு  மனோஜ்க்கு சொல்லுகின்றார். 

அந்த நேரத்தில்  கந்து வட்டிக்காரர் வீட்டிற்கு வந்து ரோகிணியை நம்பித்தான் பணம் கொடுத்ததாகவும் மனோஜ் ஒரு ஜீரோ,  அவருக்கு  டேலண்ட் இல்லை என்று சொல்லுகின்றார்.  இதை கேட்ட விஜயா கோபத்தில்  அவன் பணம் கட்டவில்லை என்றால் நான் அதை கட்டுவேன் என்று சொல்லுகின்றார்.  இதுதான் இன்றைய எபிசோட். 


Advertisement

Advertisement