• Feb 12 2026

அரோரா போலத்தான் என் மகளை வளர்ப்பேன்.! நெகிழ வைக்கும் சபரியின் பேச்சு

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 9  கிராண்ட் ஃபினாலே பற்றிய முடிவுகள் முன்கூட்டியே சமூக வலைத்தளங்களில் கசைந்து இருந்தாலும், நேரலையில் பார்த்த ரசிகர்களுக்கு சுவாரஸ்யம் குறையவில்லை. 

இந்த சீசனில் இறுதி போட்டியாளர்களாக சபரிநாதன், அரோரா, விக்ரம் மற்றும் திவ்யா கணேஷ் ஆகிய நான்கு போட்டியாளர்கள் போட்டியிட்டனர். இவர்களுக்கு தனித்தனியாகவே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் காணப்பட்டது. 

இவர்களுள்  மூன்றாவது ரன்ன ரப்பாக அரோரா எவிட்  செய்யப்பட்டு வெளியேறினார். இது மிகப் பெரிய திருப்பமாக அமைந்தது. டைட்டிலை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட அரோரா நான்காவது இடத்தில் வெளியேறியது அவருடைய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. 


அதன் பின்பு  விஜய் சேதுபதி உடன் மேடையில் பேசிய அரோரா, ஆரம்பத்தில் நான் இங்கு நிற்பேனா என்று தெரியவில்லை. என் மீது எனக்கு நம்பிக்கை வந்த பிறகு முழுமையாக விளையாட ஆரம்பித்தேன்  என்றும்,  படிப்பிற்கான முக்கியத்துவம் பற்றியும் பேசியிருந்தார். 

 இதை தொடர்ந்து  சபரிநாதன் அரோரா பற்றி தெரிவிக்கையில், எனது மகளையும் அரோரா போல நல்ல குணம் கொண்ட ஒரு பெண்ணாக வளர்ப்பேன். முதல் நாள் அரோராவை குழந்தை மாதிரி பார்த்தேன். அதேபோலத்தான் இப்பவும் பார்க்கின்றேன் என்று  சபரி பேசியது அரோராவை மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த ரசிகர்களையுமே நெகிழ வைத்திருந்தது. 



 

Advertisement

Advertisement