• Jan 19 2025

செருப்படி வாங்கியும் திருந்தாத கோபி.. மயூவை வைத்து காய் நகர்த்தும் ராதிகா

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், ஈஸ்வரியின் மாற்றத்தை பற்றி செல்வி பாக்கியாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். மேலும் இப்ப சரி உன் மாமியாருக்கு உன்ன பத்தி புரிஞ்சுதே என்றும் இந்த விஷயத்தை உன்ன டிவோர்ஸ் பண்ணின அப்பவே செய்திருக்கணும் என்றும் சொல்லுகிறார்

இன்னொரு பக்கம் கோபி ராதிகாவிடம், என்ட அம்மா எவ்வளவோ எனக்கு சப்போர்ட் பண்ணினாங்க. ஆனா இப்போ என்ன தல முழுகிட்டாங்க என்று வீட்டில் நடந்தவற்றை சொல்லி அழுகின்றார். ராதிகா மன்னிப்பு கேட்கவும், இதற்கெல்லாம் காரணம் நீயும் உன் அம்மாவும் தானே என அழுது புலம்புகிறார்.

இதை தொடர்ந்து மயூவும் ராதிகாவும் கடைக்கு போய்விட்டு வந்து கொண்டிருக்க எதிர் பக்கத்தில் பாக்யா வருகின்றார். அவர் மயூவை பார்த்துவிட்டு ஓடிப்போய் கதைக்க ராதிகா, உங்களுக்கு  யார் இந்த உரிமை கொடுத்தது? நான் கொஞ்சம் கூட நினைக்கல நீங்க இப்படி பண்ணுவீங்க என்று இதே உங்க பொண்ணுக்கு நடந்தால் சும்மா இருப்பீங்களா என விளாசுகிறார்.


ஆனாலும் பாக்கியா தனது பக்க நியாயத்தை சொல்ல, என்ன இருந்தாலும் நீங்க என்கிட்ட சொல்லி இருக்கணும் என்று சொல்லி செல்லுகிறார் ராதிகா. அதன் பின்பு செல்வி வர பாக்கியா  அவருடன் இணைந்து ரெஸ்டாரண்ட் போகிறார்.

இறுதியாக ராமமூர்த்தி ஈஸ்வரிக்கு ஜூஸ் கொடுக்க அவர் குடித்துக் கொண்டிருக்கும் போது கோபி அங்கு வருகின்றார். இதை பார்த்து இருவரும் அதிர்ச்சி அடைய, ராமமூர்த்தி கோபியை வெளியே போகுமாறு சொல்லுகிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement