• Sep 20 2024

நேற்று ரம்பா.. இன்று இன்னொரு பிரபலம்.. தினமும் விஜய்யை சந்திக்கும் நட்சத்திரங்கள்..!

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

நேற்று தளபதி விஜய்யை நடிகை ரம்பா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் சந்தித்த நிலையில் இன்று ’மகாராஜா’ படத்தை இயக்கிய இயக்குனர் நிதிலன் சுவாமிநாதன் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

விஜய் சேதுபதி நடித்த ’மகாராஜா’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பாக விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான இந்த படம் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.



அதுமட்டுமின்றி இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ள நிலையில் ஓடிடியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருவதாகவும் குடும்ப ஆடியன்ஸ்கள் அதிகம் இந்த படத்தை பார்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’மகாராஜா’ திரைப்படத்தை பார்த்த தளபதி விஜய் படக்குழுவினர்களை நேரில் அழைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். குறிப்பாக நிதிலன் சுவாமிநாதனுக்கு தனது தனிப்பட்ட வாழ்த்துக்களை தெரிவித்ததாகவும் அதே போல் பட தயாரிப்பு நிறுவனத்திற்கும் வாழ்த்துக்களை தெரிவித்ததாகவும் தெரிகிறது. விஜய்யுடன் நிதிலன் சுவாமிநாதன் சந்தித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.



நேற்று விஜய்யை நடிகை ரம்பா சந்தித்த நிலையில் இன்று நிதிலன் சுவாமிநாதன் சந்தித்துள்ளார். இதனை அடுத்து நாளை யார் விஜய்யை சந்திப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement