• Jan 19 2025

விஜயா கன்னம் தப்பினது பிழையா போச்சு.. பார்வதி கொடுத்த அதிர்ச்சி! எதிரான குடும்பம்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், விஜயா கதவு திறக்காததால் மனோஜ், ரோகிணி கதவை தட்டிக் கொண்டிருக்க, அங்கு முத்து மீனா வந்ததும் முத்துக்கு அம்மா மேல பாசமே இல்ல. அதான் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கான். அம்மாவுக்கு எதுவும் நடந்தா இவன் சந்தோஷம் தான் படுவான் என்று சொல்லுகிறார்.

இதை கேட்ட மீனா கோபப்பட்டு நீங்க பாத்தீங்களா? அவர் அத்தை வெளியே வாரத்துக்கு என்ன செய்யணுமோ அதை செய்து கொண்டுதான் இருக்கின்றார் என்று சொல்ல, பார்வதியும் சரியாக வருகின்றார். அவர் அண்ணாமலை இடம் சென்று பேச உனக்கும் ஏற்கனவே விஷயம் தெரியுமா என்று கேட்க, மனோஜ்க்காக விஜயா இப்படி பண்ணிட்டாள் என்று அவரும் மன்னிப்பு கேட்கின்றார்.

அதன் பின்பு விஜயாவின் கதவை பார்வதி தட்ட அவரை இழுத்து உள்ளே எடுக்கின்றார் விஜயா. அதன் பின்பு பார்வதி வெளியே வர விஜயாவின் கையையும் பிடித்து வெளியே இழுத்து விடுகின்றார். இதனால் வேறு வழி இன்றி விஜயா வெளியே வந்து முழித்துக் கொண்டிருக்கின்றார்.

இதை தொடர்ந்து அண்ணாமலையிடம் மன்னிப்பு கேட்குமாறு பார்வதி சொல்ல, தப்பு செஞ்சது விஜயா மன்னிப்பு கேட்க வேண்டியது மீனாவிடம் என்று அண்ணாமலை சொல்லுகின்றார். ஸ்ருதியும் அதுதான் சரி என்று சொல்லுகிறார்.

இதனால் எல்லாரையும் எனக்கு எதிரா திருப்பி விடுறியா என கோபப்பட்ட விஜயா, நான் ஒரு நாளும் உன்கிட்ட தாழ்ந்து போக மாட்டேன் என வைராக்கியமாக இருக்கின்றார்.

இறுதியாக பெரிய அம்மா வீட்டு சீதனம் தானே கொண்டு வந்தா  என்று மீனாவுக்கு பேசி தன் கைகளில் போட்டிருந்த வளையலை கழட்டி மீனாவின் முகத்தில் வீசுகின்றார். இதை பார்த்த முத்து இதை வேற யாரும் பண்ணியிருந்தால் சும்மா விட மாட்டேன் என்று சொல்ல, என்ன தலையை எடுக்க போறியா எடுத்துக் கொள்ளு என்று நிற்கின்றார் விஜயா. இதுதான் இன்றைய எபிசோட்.


Advertisement

Advertisement