• Feb 22 2025

தமிழ் சமூகம் குட்டிச் சுவராக மாற ராதிகா தான் முக்கிய காரணம்! பிரபல விமர்சகர் அதிரடி பேச்சு

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

எம்.ஆர். ராதாவின் மகள் ராதிகா, இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு வெளியான ‘கிழக்கே போகும் ரயில்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.

நடிகை ராதிகா தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, கார்த்தி என முன்னணி நடிகர்களுடன் நடித்து ஒரு பத்தாண்டு காலம் முன்னணி நடிகையாக வலம் வந்தார். கதாநாயகியாக இல்லாவிட்டாலும், தொடர்ந்து, தமிழ் சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். நடிகை ராதிகா, நடிகர் சரத்குமாரை 2001-ம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார்.

அதுமட்டுமில்லாமல், சன் டிவியில் ஒளிபரப்பான சித்தி சீரியலில் நடித்து பட்டி தொட்டியெங்கும் ரசிகர்களின் நீங்கா இடம் பிடித்தார். தொடர்ந்து, டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.


இந்நிலையில், மூத்த அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ் அண்மையில் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், நமது தமிழ்ச் சமுதாயமே குட்டிச் சுவராகி நாசமாக போனதிற்கு முக்கிய காரணமே ராதிகா தான் என்று அதிரடியாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அந்த பேட்டியில் டாக்டர் காந்தராஜ் கூறும் போது,

ராதிகாவின் நடிப்பு மிகப் பிரமாதமாக இருக்கும். கிழக்கு சீமையிலே படத்தில் எல்லாம் ராதிகாவின் நடிப்பு அருமையாக இருக்கும். எல்லா கதாபாத்திரங்களுக்கும் அவர் சூட் ஆவார். மீண்டும் ஒரு காதல் கதை என்ற படத்தில் மன நிலை பிறழ்ந்த பெண்ணாக நடித்திருப்பார். அந்த படமும் சரி, ராதிகாவின் நடிப்பும் நன்றாக இருக்கும்.


டிவி சீரியல்களுக்கு புது உருவம் கொடுத்ததே ராதிகா தான். சித்தி என்ற ராதிகாவின் சீரியல்தான் சீரியலையே அறிமுகப்படுத்தியது . இன்றைக்கு நமது சமுதாயமே குட்டிச் சுவராகி நாசமாகப் போனதற்கு முக்கிய காரணமே ராதிகா தான் என்று சிரித்துக் கொண்டே பேசியுள்ளார்.

மேலும், ராதிகாவின் சித்தி சீரியலைப் பார்த்து அடிக்டாக்கி இன்னமும் அதில் இருந்து வெளியில் வர முடியாமல் மாட்டிக் கொண்டிருக்கிறோம். சீரியல்களுக்கு பெரிய மார்க்கெட் கொடுத்ததே அவர் தான். தமிழ் சீரியல் உலகின் தாய் என்று ராதிகாவை கண்ணை மூடிக் கொண்டு சொல்லலாம். ராதிகா வரிசையாக நடித்த 4 சீரியல்களும் சூப்பர் ஹிட்.. என்று புகழ்ந்து கூறினார்.

Advertisement

Advertisement