• Feb 23 2025

என்னை அடித்ததால் தான் நான் அவரை அடித்தேன்! ஷகிலாவின் வளர்ப்பு மகள் பேட்டி

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

மலையாளத்தில் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஷகிலா. இவர் தமிழ் படங்களில் சில குணசித்ர கதாபாத்திரத்திக் நடித்திருந்தார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஷகிலாவை கவர்ச்சி நடிகையாக பார்த்து வந்த சிலர் இந்த நிகழ்ச்சிக்கு பின் ஷகிலா அம்மா என்று பல பேர் அழைத்தனர். இதை அவரை பல பேட்டியில் கூறியுள்ளார்

இந்த நிலையில் நேற்றைய தினம் நடிகை ஷகிலா மீது தாக்குதல் ஒன்று நடைபெற்றுள்ளது என அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. அவரது வளர்ப்பு மகளால் தாக்கப்பட்டார் என்று ரொம்பவும் பரபரப்பாக பேசப்பட்டது.


இந்நிலையில், ஷீத்தல் அளித்த பேட்டியில் அத்தை (ஷகீலா) குடிபோதையில் தன் தாய் மற்றும் சகோதரி பற்றி மோசமாக பேசியதால் தான் சண்டை வந்தது என கூறி இருக்கிறார். குடித்துவிட்டு வந்து தினமும் தன்னை ஷகீலா அடிக்கிறார் என்றும் அவர் புகார் தெரிவித்து உள்ளார்.


அவர் என்னை அடித்ததால் தான் நான் அடித்தேன். அதன் பின் வழக்கறிஞர் வந்து எங்கள் முடியை பிடித்து கொண்டார். அதனால் தான் என் அம்மா அவரை கடித்தார் என ஷீத்தல் தெரிவித்து இருக்கிறார்.

இந்த சம்பவம் பற்றி போலீஸ் தற்போது விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement