• Apr 03 2025

இதெல்லாம் கொஞ்சம் ஓவர்.. டிரைலர் ரிலீஸ்க்கு வந்த ராஷி கண்ணாவின் கண்றாவி காஸ்ட்யூம்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

பொதுவாக நடிகைகள் டிரைலர் வெளியீட்டு விழா உள்பட சினிமா புரமோஷன் விழாவுக்கு வரும் போது ஓரளவு கிளாமர் உடையில் வருவார்கள் என்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் நடிகை ராஷி கண்ணா சமீபத்தில் ஹிந்தி பட டிரைலர் ரிலீஸ் விழா நடந்த போது அதில் அவர் கிளாமராக காஸ்ட்யூம் அணிந்து வந்தது படக்குழுவினர்களையே முகம் சுளிக்க வைத்ததாக கூறப்படுகிறது.



தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்து வரும் ராஷி கண்ணா தமிழில் நயன்தாரா நடித்த ’இமைக்கா நொடிகள்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு ’அடங்க மறு’ ’அயோக்யா’ ’சங்கத்தமிழன்’ உள்பட ஒரு சில தமிழ் படங்களில் நடித்த நிலையில் தற்போது அவர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் ’அரண்மனை 4’ மற்றும் ’மேதாவி’ ஆகிய தமிழ் படங்களிலும் சில ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.



இந்த நிலையில் ராஷி கண்ணா  ’யோதா’ என்ற ஹிந்தி படத்தில் நடித்துள்ளார். சித்தார்த் மல்ஹோத்ரா நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ’கங்குவா’ நாயகி திஷா பதானி உள்பட  பலர் நடித்துள்ளனர்.



இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் மார்ச் 15ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவுக்கு ராஷி கண்ணா வந்திருந்த போது அவர் அணிந்திருந்த உடையை பார்த்து படக்குழுவினர்களே அதிர்ச்சி அடைந்தனர். சிகப்பு கலரில் படு கிளாமராக வந்த அவர் ஒட்டுமொத்த பார்வையாளர்களை ஈர்த்துவிட்டார் என்றும் அவரது அனைவரும் அவரையே பார்த்துக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement