• Jul 05 2024

கிருத்திகா உதயநிதி அடுத்த படத்தில் இணைந்த கமல்ஹாசன் மகள்.. வைரலாகும் புகைப்படம்..!

Sivalingam / 4 months ago

Advertisement

Listen News!

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ’காதலுக்க நேரமில்லை’ என்ற திரைப்படம் உருவாகி வரும் நிலையில் இந்த படத்தில் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா உதயநிதி ஏற்கனவே 'வணக்கம் சென்னை’ ’காளி’ ஆகிய திரைப்படங்களையும் ’பேப்பர் ராக்கெட்’ என்ற வெப் தொடரையும் இயக்கி உள்ளார் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் தற்போது அவர் ’காதலிக்க நேரமில்லை’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு,  வினய்,  லால்,  ஜான் கொக்கன், பானு,  லட்சுமி ராமகிருஷ்ணன்,  வினோதினி, பாடகர்  மனோ  உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

கடந்த 1964ஆம் ஆண்டு ஸ்ரீதர் இயக்கத்தில் ரவிச்சந்திரன், நாகேஷ், காஞ்சனா, டிஎஸ் பாலையா நடித்த ’காதலிக்க நேரமில்லை’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படமும் ஒரு ரொமான்ஸ் கதை அம்சம் கொண்டது என்றும் இந்த படம் தமிழ் சினிமாவில் வித்தியாசமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்திற்காக பாடல் ஒன்று சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டதாகவும் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் கம்போஸ் செய்த இந்த பாடலை சினேகன் எழுதியதாகவும் இந்த பாடலை ஸ்ருதிஹாசன் பாடி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த பாடல் ஒலிப்பதிவின் போது எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் படக்குழுவினர் பகிர்ந்து உள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகும் படத்தில் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் இன்னும் ஒரு நாட்களில் சிங்கிள் பாடலாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement