• Jan 19 2025

மீனாவை மிரட்டிய ரோகிணிக்கு தரமான செருப்படி! இருந்த இடத்திலேயே சம்பாதிக்க தொடங்கிய மனோஜ்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதில், ரோகிணிட அப்பா ரோகிணிக்கு காசு போடாம உனக்கு ஏன் காசு போட்டாங்க என முத்து துருவி துருவி கேட்க, மனோஜை பதில் சொல்ல விடாமல் ரோகிணி அதனை சமாளிக்கிறார். 

அதன்பின் ரோகிணி நேராக கிச்சனுக்கு சென்று அங்கு மீனாவிடம் உங்க புருஷன் ஏன் எங்க விஷயத்துல தலையிடுகிறார். அவருக்கு வயித்தெரிச்சலா இல்ல பொறாமையா? இனி எங்க விஷயத்துல தலையை விட வேண்டாம் என்று சொல்லுங்கள் என மீனாவிடம் சொல்லுகிறார். அதற்கு மீனா அவருக்கு எந்த வயதெரிச்சலும் இல்லை. அவர் சந்தேகத்தை தான் கேட்டார். நீங்க பேசுற பேச்ச பாத்தா எனக்கே சந்தேகம் வருது உண்மையா உங்க அப்பா தான் அனுப்பினாரா என்று மீனா பதிலடி கொடுக்கிறார்.

மேலும் ரோகிணி முத்துவை பற்றி குறையாக பேசிக் கொண்டு இருக்க, நாங்க கார் வாங்கின போது நீங்களும் தான் துருவி துருவி விசாரிச்சீங்க அப்ப அதுக்கு என்ன சொல்றது என்று கேட்க,  அது சும்மா தெரிஞ்சுக்கலாம் என்று கேட்டேன் என்று ரோகினி சொல்லுகிறார.  அது போல தான் இதுவும் என்று பதிலடி கொடுத்து அனுப்புகிறார் மீனா.


இதைத்தொடர்ந்து முத்துவிடம் சென்ற மீனா, நீங்க ஏன் வாயை வச்சுட்டு சும்மா இருக்க மாட்டேன்றீங்க. ரோகினி விஷயத்துல இனி தலையிடாதீங்க. நீங்க பேசிட்டு போயிருவீங்க பிறகு அத்தையும் ரோகிணியும் என்ன விட மாட்டாங்க என்று மீனா சொல்லுகிறார். இப்போ உன்னை யார் என்ன சொன்னாங்க இப்பவே நான் கேட்கிறேன் என முத்து கிளம்ப,  நீங்க ஒண்ணுமே செய்ய வேண்டாம் என்று அனுப்பி வைக்கிறார் மீனா.

இதை அடுத்து ரோகிணியும் வித்யாவும் ரோட்டால் சென்று கொண்டிருக்க, அங்கு பிஏ வருகிறார். அவர் ரோகிணியிடம் நான் கேட்ட ஒரு லட்சம் ரூபாய் பணம் எப்ப தரப்போகிறாய் என்று கேட்கிறார். அப்படித்தர இல்லாட்டி நான் உன் வீட்டுக்கு வந்து உன் குடும்பத்தை பற்றியும் உன் பிள்ளையை பத்தியும் சொல்லுவேன் என மிரட்டுகிறார். இதனால் பணம் தருவதாக அவரை அனுப்பி வைத்துவிட்டு, மனோஜ்ட தான் பணம் கேட்கணும். ஆனால் அவனை ஏமாத்துறது இதுதான் கடைசியாக இருக்கணும் என்று வித்யாவுடன் பேசிக் கொள்கிறார்.

வீட்டுக்கு வந்த ரோகினி மனோஜிடம் என்ன செய்கிறாய் எனக்  கேட்க, உலகத்துல இருக்கிற பணக்காரங்க எப்படி முன்னுக்கு  வந்தாங்க என்று பார்க்கிறேன் என்று சொல்லுகிறார். அதற்கு ரோகிணி யாரையும் பார்த்து எதுவும் பண்ண வேணாம் நம்மளால என்ன முடியுமோ அதை தான் பண்ணனும் என்று அட்வைஸ் பண்ணுகிறார்.

அதன் பின்பு மனோஜ் பணத்தை வட்டிக்கு கொடுப்போமா என்று கேட்க, ரோகினியும் யோசித்து விட்டு பிஏவுக்கு காசு கொடுக்க இது தான் வழி என்று சரி நானே உன்னிடம் முதல் வாங்குகிறேன் எனக்கு ஒரு லட்சம் ரூபாய் வட்டிக்குதா என்று கேட்டு உடனே 2000 ரூபாயை அவருக்கு வட்டியாக கொடுத்து ஒரு லட்சத்தை வாங்கிக் கொள்கிறார். 

மேலும், பாத்தியா நீ இருந்த இடத்திலேயே 2000 ரூபாய் சம்பாதித்து விட்டாய் என மனோஜ்க்கு வாழ்த்துக்கள் சொல்லுகிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement