• Jul 15 2025

“கேம் சேஞ்சர்” படம் எதிர்பார்ப்புகளை ஏமாற்றியது.! மனமுடைந்து பேசிய தயாரிப்பாளர்...

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமா உலகில் கடந்த சில ஆண்டுகளில் மிகப்பெரிய சாதனைகளை உருவாக்கிய நடிகர் ராம் சரண், ‘RRR’ என்ற பன்னாட்டு வெற்றிப் படத்திற்கு பிறகு மீண்டும் மெகா ஹிட்டை தக்க வைத்திருப்பார் என ரசிகர்களும் தயாரிப்பாளர்களும் எதிர்பார்த்திருந்தனர். அந்த எதிர்பார்ப்பை தாங்கிக்கொண்டு வந்த படம் தான் "கேம் சேஞ்சர்". இந்த படம் ஒரு "பொலிட்டிக்கல் ஆக்‌ஷன் திரில்லர்" வகையை சேர்ந்தது.


ஆனால் படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு ரசிகர்களிடையே ஏற்பட்ட ஏமாற்றமும், ரசிகர்களின் மறுமொழிகளும் பெரிதும் எதிர்மறையானவையாகவே இருந்தன. இதனால், இப்படம் திரையரங்குகளில் எதிர்பார்த்த அளவு வசூலிக்க முடியாமல் நஷ்டத்தில் முடிவுற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், சமீபத்தில் ஒரு தெலுங்கு ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில், தயாரிப்பாளர் தில் ராஜு, “கேம் சேஞ்சர் படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. நான் மிகுந்த நம்பிக்கையுடன் செய்த படம் இது. RRR படத்திற்குப் பிறகு ராம் சரணுக்கு ஒரு வெற்றிப் படத்தை கொடுக்க முடியவில்லை என்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது,” எனக் கூறியுள்ளார்.


அவர் மேலும், “நான் விரைவில் ஒரு பெரிய நட்சத்திர ஹீரோவை வைத்து ஒரு ஹைபை ஏற்பட்டுத்தும் மாஸ் படத்தை தயாரிக்க போகிறேன். அந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டில் தொடங்கும், மற்றும் 2027 அல்லது 2028-இல் படம் வெளியாகும்.”  எனவும் தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement