• Nov 22 2024

அஜித் மகனாக நடிக்கும் ரூ.100 கோடி வசூல் பட நடிகர்.. ‘குட் பேட் அக்லி’ ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

அஜித் நடித்து வரும் ’குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்றுடன் ஹைதராபாத்தில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த முதல் கட்ட படப்பிடிப்பில் அதிரடி ஆக்சன் காட்சிகளும் அஜித்தின் அறிமுக பாடலும் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டதாகவும் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜப்பானில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் அஜித் தவிர மற்ற நட்சத்திரங்கள் குறித்த தகவல் இதுவரை அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை என்ற நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் நடித்த மலையாள நடிகர் நஸ்லின் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.



இந்த நிலையில் இந்த தகவல் தற்போது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், நஸ்லின்  இந்த படத்தில் அஜித் மகனாக நடிக்க உள்ளதாகவும் இவரது கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க அஜித்தே பரிந்துரை செய்துள்ளதாகவும் தெரிகிறது. சமீபத்தில் அஜித் ‘பிரேமலு’ படத்தை பார்த்தவுடன் அவரது நடிப்பு பிடித்ததை அடுத்தே நஸ்லீனை இந்த படத்தில் இணைக்கலாம் என்று  இயக்குனரிடம் கூறியதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

நஸ்லின் மற்றும் மமிதா பாஜு நடித்த ’பிரேமலு’ திரைப்படம் தமிழ், தெலுங்கு ,மலையாளம் ஆகிய மூன்று மொழிகளையும் சேர்த்து ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதை அடுத்து அவருக்கு அடுத்த படமே அஜித் உடன் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அஜித்துடன் நஸ்லின் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ படம் ரிலீஸ் ஆனால் அவருக்கு தமிழிலும் அதிக வாய்ப்பு கிடைக்கும் என்றும் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக உருவாக்கி விடுவார் என்றும் கூறப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement